search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "desserts"

    • சுவீட் என்றதுமே குலோப்ஜாமூனிற்கு என்று தனி இடம் உண்டு.
    • பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    குலோப்ஜாமூன் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். சுவீட் என்றதும் குலோப் ஜாமூனிற்கு என்று தனி இடம் உண்டு. குலோப்ஜாமூன், ரசகுல்லா எல்லாம் ஒரே கேட்டகரியில் வரக்கூடிய இனிப்பு வகைகள். அந்த வகையில குலோப்ஜாமூன் என்று சொல்லும் போதே எல்லாருடைய நாக்கிலும் அதன் சுவை எச்சில் ஊற வைத்துவிடும். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் குலோப்ஜாமூன்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் எல்லா கடைகளில் கிடைக்கும். அதை வாங்கித் தான் எல்லோரும் எப்பவுமே செய்துகொண்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அது என்னடா பிஸ்கட் குலோப் ஜாமூன் அப்படிங்கறிங்களா. சரி வாங்க பிஸ்கட் குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கட்- 2 பாக்கெட்

    சர்க்கரை- 1 கப்

    ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை

    பால்- 1/2 கப்

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் மேரி பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள பிஸ்கட்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு பொடித்து வைத்துள்ள பிஸ்கட் பவுடரில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து குலாப் ஜாமுன் உருண்டைகள் உருட்டும் பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பு இல்லாமல் உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

    பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரைப்பாகில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பாகை உறிந்த பின் சாப்பிட்டால் சுவையான பிஸ்கட் குலாப் ஜாமூன் தயார்.

    • பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள்.

    பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள். பண்டிகை நாட்களை தித்திக்க வைக்கும்படி, பரவலாக ருசிக்கப்படும் இனிப்பு பலகாரங்கள் உங்கள் பார்வைக்கு...

    குலாப் ஜாமூன்:

    சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு பலகாரம் இது. பாலை மிதமான சூட்டில் நீண்ட நேரம் கொதிக்கவிட்டு, அதனை சுண்ட வைத்து அதில் மைதா மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும். பின்பு அதனை சர்க்கரை பாகில் ஊற வைத்து ருசிப்பர். இப்போது குலாப் ஜாமூன் மாவு கடைகளில் கிடைக்கிறது. அதனை கொண்டு சுலபமாக தயாரித்து ருசிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பால் பேடா:

    பால், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இது பண்டிகை காலங்களில் ருசிக்கப்படும் பலகாரங்களில் தனித்துவமானது. வட்ட வடிவில் இருக்கும் இதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பால் பேடா செய்வதற்கு சுமார் 2 மணி நேரமாகும். ஒரு லிட்டர் பாலை பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

    பால் பாதியாக குறைந்ததும் 100 கிராம் சர்க்கரை, அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் சேர்க்கவும். பால் நன்றாக சுண்டி, பாத்திரத்திலேயே தனியாக திரண்டு வரும். அப்போது மிக குறைந்த தீயில் வைத்து இறக்கவும். கோவா கையில் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும். அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவத்தில் அலங்கரித்து ருசிக்கலாம்.

    காஜு கத்லி:

    முந்திரி பர்பி என்றும் அழைக்கப்படும் இது முகலாய காலத்தை சேர்ந்தது. காஜு என்றால் முந்திரி என்றும், பர்பி என்பது பாலுடன் சர்க்கரை, குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்கள் கலந்து கொதிக்கவைத்து கெட்டி பதத்துக்கு மாற்றுவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது வைரத்தை போன்று வெட்டி பரிமாறப்படுவதால் வைர வடிவ இனிப்பு பலகாரமாகவும் காட்சி அளிக்கிறது.

    ஜிலேபி:

    மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.

    தேங்காய் பர்பி:

    தேங்காய் துருவல், முந்திரி, பாதாம், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயார் செய்யப்படும் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் இனிப்பு பலகாரமாகும். இதனை தயார் செய்வதும் எளிதானது.

    தேவையானவை:

    தேங்காய் துருவல் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    ஏலக்காய் - 4 (பொடித்தது)

    முந்திரி, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:
    முதலில் தேங்காய்த் துருவலை வாணலியில் கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனை இறக்கியதும் மற்றொரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். அந்த பதத்துக்கு வந்ததும் தேங்காய் துருவலைக் கொட்டி கிளறவும். இடைவிடாமல் தொடர்ச்சியாக கிளறவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும். கெட்டி பதத்துடன் வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். பின்பு நெய்யில் முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தேங்காய் கலவையில் கொட்டி லேசாக கிளறவும். ஓரளவுக்கு சூடு ஆறியதும் துண்டுகளாக வெட்டி ருசிக்கலாம்.

    • லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.
    • லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர்.

    லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும், இது சர்க்கரை, கோதுமை மாவு, நெய் மற்றும் பிற பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு ஆகும். லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர். லட்டு வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த இனிப்பு ஆகும். இது ஒரு சிறந்த ஆரோக்கியமான இனிப்பு ஆகும், இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. லட்டு செய்ய பல வழிகள் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி பழத்தினை வைத்து வித்தியாசமான முறையில் ஸ்ட்ராபெர்ரி லட்டு செய்யலாம். அதற்கான செய்முறை விளக்கங்களை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பூந்தி தயாரிக்க:

    கடலை மாவு -150 கிராம்

    இளஞ்சிவப்பு நிற சிரப் - 1 தேக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் - 120 மில்லி

    நெய் - தேவையான அளவு

    சர்க்கரை பாகு தயாரிக்க:

    சர்க்கரை - 150 கிராம்

    ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ் அல்லது எசென்ஸ் - ஒரு மூடி

    சர்க்கரை - 100 கிராம்

    தண்ணீர் - 150 மில்லி

    பிஸ்தா, பாதாம் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு. இளஞ்சிவப்பு நிற சிரப், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். இதனை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ், சர்க்கரை சேர்த்து கலக்கி, கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். தேவைப்பட்டால் அதில் சில துளிகள் இளஞ்சிவப்பு நிற சிரப் சேர்க்கலாம்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது தயாரித்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையை சல்லடைக் கரண்டி மூலம் அதில் ஊற்றவும். பூந்தி நன்றாக பொரித்து வந்ததும், அதை ஸ்ட்ராபெர்ரி பாகில் போடவும். இந்த பூந்திக் கலவை சூடாக இருக்கும் போதே, உருண்டைகளாக பிடிக்கவும். தேவைப்பட்டால் அதில் சிறிது நெய் சேர்க்கலாம். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது 'ஸ்ட்ராபெர்ரி லட்டு தயார்.

    திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட உலர் திராட்சையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

    மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

    உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர்.

    திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

    உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன.

    விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
    ×