search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா தினம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.
    • கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின்போது, இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் மூலம் 4700 நோயாளிகள் பங்கேற்றனர்.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி டெல்லி அரசு சார்பில் யோகாசன நிகழ்ச்சிக்கு தியாராஜ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்கள் யோகா ஆசனங்கள் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.

    பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    யோகா பயிற்சி செய்யும் பழக்கம் குழந்தைகளிடம் ஏற்படுத்தப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதனுடன் இணைந்திருப்பார்கள். குழந்தைக்கு யோகா கற்பிப்பதும், பள்ளிகளில் அதை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

    டெல்லி அரசு நகரத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. என்றாலும், யோகா செய்வதை அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

    யோகா பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானோர் என்கிற நிலையில் இருந்து லட்சக்கணக்கானோர் என்கிற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். நான் 8-ம் வகுப்பில் யோகாவை இலவசமாகக் கற்றுக்கொண்டேன். எனவே இது மக்களுக்கு இலவசமாக இருக்கும். காற்றைப் போன்று வாழ்வின் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் இலவசம்.

    டெல்லி யோகா பள்ளியின் கீழ், இலவச வகுப்புகளின் ஒரு பகுதியாக ஆண்கள், பெண்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என 17,000க்கும் மேற்பட்ட டெல்லிவாசிகள் தினமும் 546 இடங்களில் யோகா பயற்சி செய்கின்றனர்.

    கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் மூலம் 4700 பேர் பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் உலக அமைதி வேண்டி பிரம்மா குமாரிகள் அமைப்பினர் பேரணி நடத்தினர்.
    • மதுரையில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரையில் இயங்கி வரும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி உலக அமைதி மற்றும் சமுதாய முன்னேற்றம் வேண்டி அமைதிப்பேரணி மதுரையில் நடந்தது.

    மதுரை ஆயுதப்படை மாரியம்மன் கோவில் வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாநகரக்காவல் தலைமையிட துணை ஆணையர் வனிதா, பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மதுரை துணை மண்டல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பிரம்மாகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மதுரை நாராயணாபுரம் அருகே உள்ள பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மாவட்ட தலைமையிடமான விஷ்வசாந்தி நகரில் உள்ள விஷ்வசாந்தி பவனில் பேரணி முடிவடைந்தது. இதை தொடர்ந்து தியானம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தன.

    • யோகா பேரணியை இன்ஸ்பெக்டர் செல்வி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
    • யோகா விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு மாணவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    பள்ளி கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் செயலர் காந்திமதி மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினர். முதல்வர் வனிதா மற்றும் துணை முதல்வர் கிப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனர்.

    காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த யோகா பேரணியை இன்ஸ்பெக்டர் செல்வி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் பாட்டு, நடனம், யோகா உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தினர்.

    காவலர்கள் மற்றும் பொதுமக்கள் யோகா விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்விக் குழுமத் தலைவர், செயலர் மற்றும் முதல்வர் வனிதா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×