search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் யோகா கற்றுத்தரப்பட உள்ளது- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் யோகா கற்றுத்தரப்பட உள்ளது- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.
    • கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின்போது, இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் மூலம் 4700 நோயாளிகள் பங்கேற்றனர்.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி டெல்லி அரசு சார்பில் யோகாசன நிகழ்ச்சிக்கு தியாராஜ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்கள் யோகா ஆசனங்கள் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.

    பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    யோகா பயிற்சி செய்யும் பழக்கம் குழந்தைகளிடம் ஏற்படுத்தப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதனுடன் இணைந்திருப்பார்கள். குழந்தைக்கு யோகா கற்பிப்பதும், பள்ளிகளில் அதை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

    டெல்லி அரசு நகரத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. என்றாலும், யோகா செய்வதை அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

    யோகா பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானோர் என்கிற நிலையில் இருந்து லட்சக்கணக்கானோர் என்கிற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். நான் 8-ம் வகுப்பில் யோகாவை இலவசமாகக் கற்றுக்கொண்டேன். எனவே இது மக்களுக்கு இலவசமாக இருக்கும். காற்றைப் போன்று வாழ்வின் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் இலவசம்.

    டெல்லி யோகா பள்ளியின் கீழ், இலவச வகுப்புகளின் ஒரு பகுதியாக ஆண்கள், பெண்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என 17,000க்கும் மேற்பட்ட டெல்லிவாசிகள் தினமும் 546 இடங்களில் யோகா பயற்சி செய்கின்றனர்.

    கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் மூலம் 4700 பேர் பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×