search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா தின விழா"

    • யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி
    • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐ.என்.ஸ். விக்ராந்த் கப்பலில் அதிகாரிகளுடன் யோகா செய்தார்

    சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 9-வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தார்.

    அதேபோல் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதி இரானி, ராஜ்நாத் சிங், அனுராக் தாகூர் ஆகியோர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

    உத்தரகாண்டில் யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், உத்தரகாண்ட் முதலமைச்சர் கலந்து கொண்டார்.

    ராணுவ வீரர்களும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.

    • 9-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
    • ஐ.நா. சபையில் ஏற்பாடு செய்துள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

    இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் சென்றடைந்த அவர் தொழில்அதிபர்கள், நோபல் பரிசு வென்றவர்கள், வல்லுனர்கள், விஞ்ஞானிகள், முன்னணி நிறுவன சிஇஓ-க்கள் போன்றோரை சந்தித்தார்.

    அமெரிக்க நேரடிப்படி நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் யோகா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இந்தியாவில் யோக தினத்தையொட்டி தலைவர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

    அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி, உலக யோகா தினம் குறித்து கூறியிருப்பதாவது:-

    ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பேன். இந்தியாவின் அழைப்பின் பேரில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது. 2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் யோகா தினத்திற்கான முன்மொழிவு வந்தபோது, அதற்கு ஏராளமான நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

    யோகா உணர்வுகளை வலுப்படுத்துகிறது, உள் பார்வையை விரிவுபடுத்துகிறது, நம்மை இணைக்கிறது, உயிரினத்தின் ஒற்றுமையை உணர வைக்கிறது.

    நாம் யோகா மூலம் முரண்பாடுகள், தடைகள் மற்றும் எதிர்ப்பை நீக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • தம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின விழா நாளை நடைபெற உள்ளது.
    • வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை பார்வையிடுகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக காரில் இன்று இரவு 7.30 மணிக்கு சிதம்பரம் வருகிறார். இன்று இரவு அண்ணாமலை பல்கலைக் கழ க விருந்தினர் விடுதியில் தங்குகிறார். நாளை (புதன்கிழமை) பல்கலைக் கழக விளையாட்டு மைதா னத்தில் நடைபெறும் உலக யோகா தின விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார்.

    நாளை மதியம் 3.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வள்ளலார் பிறந்த இடமான மருதூர் செல்கிறார். அதனை தொடர்ந்து வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை பார்வையிடுகிறார். இதனை தொடர்ந்து வடலூரில அநை்துள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்று வழிபடுகிறார். பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    ×