search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிள் விபத்து"

    உடுமலையில் அரசு பஸ்சும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 வாலிபர்கள் பலியாயினர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வெங்கடேசா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 25). கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் ராஜகவின் (27), அருண் (24). இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மடத்துக்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு உடுமலை- பழனி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து செங்கோட்டைக்கு அரசு பஸ் சென்றது. பெரியகோட்டை பிரிவு என்ற இடத்தில் வந்தபோது பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதில் பார்த்திபன், ராஜகவின் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். அருண் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பார்த்திபன், ராஜகவின் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கருங்கல் அருகே மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் பாதிரியார் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பொட்டக்குழியைச் சேர்ந்தவர் பென்னட் ஜோசப் ராஜ் (வயது 39). இவர் திரிபுராவில் பாதிரியாராக பணியாற்றி வந்தார்.

    தற்போது கண்டன் விளையில் உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை பணிக்காக வந்திருந்தார். நேற்று இரவு அவர் தெருவுக்கடையில் நடந்த தனது உறவினர் திருமண விழாவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் கண்டன்விளை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

    பாலூர் அருகே தாளையங்கோட்டை பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பென்னட் ஜோசப்ராஜீன் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பென்னட் ஜோசப் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் பாதிரியாரின் சகோதரர் கிறிஸ்துராஜ் புகார் செய்தார். போலீசார் பலியான பென்னட் ஜோசப்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பென்னட் ஜோசப்ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது, அதை ஓட்டிச் சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதற்காக விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews

    தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சென்னியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் வீரபாண்டியன் (வயது 23).

    இவர் புதுவை தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை பார்த்து வந்தார். பணிக்கு செல்ல வசதியாக அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர், தவளக்குப்பத்தில் உள்ள ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுக்க வந்தார். அப்போது புதுவை- கடலூர் சாலையை கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வீரபாண்டியன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வீர பாண்டியனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு வீரபாண்டியன் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை நோணாங்குப்பம் புதுநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70). சம்பவத்தன்று இவர் சைக்கிளில் வீட்டுக்கு செல்ல புதுவை- கடலூர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமலிங்கம் படுகாயம் அடைந்தார். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராமலிங்கம் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார்.

    இந்த 2 விபத்துகள் குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம், ஏட்டு புவனேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    சூலூர் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சூலூர்:

    கேரளா மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 23 ). கோழிக்கோட்டை சேர்ந்த அகமது ஷெரீப் என்பவரது மகன் சையத்அப்துல் பாசித்( 24). இவர்கள் 2 பேரும் சூலூரில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி ரோட்டில் சென்றனர். சூலூர் பிரிவு அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதியது. விபத்தில் சம்பவஇடத்திலேயே விஷ்ணு பரிதாபமாக இறந்தார். சையத் அப்துல் பாசித் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லு (வயது 60), அ.தி.மு.க. கிளைச் செயலாளர்.

    இவர் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றபோது, போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜ்குமார் (26) மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    எதிர்பாராத விதமாக தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள், நல்லு மீது மோதியது. இந்த விபத்தில் தலை மற்றும் காலில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு நல்லு பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பெரியப்பாவுடன் சென்ற அக்காள் தங்கை பலியாயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் சிறுமுகை, காந்தவயலை சேர்ந்தவர் கிருபைராஜ் (வயது 47). இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள தனியார் பஞ்சு மில்லில் அதிகாரியாக உள்ளார்.

    நேற்று இரவு சத்தியமங்கலத்தில் அதிகாரி ஒருவரின் பிரிவுபசார விழாவின் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கிருபைராஜ் கலந்து கொள்ள இருந்தார்.

    இதற்காக அவர் பவானிசாகருக்கு வந்தார். பவானிசாகர் நால்ரோட்டில் உள்ள தனது தம்பி பவானி சங்கர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்து பிரிவுபசார விழா விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். அவருடன் பவானிசங்கரின் மகள்களான சந்திரலேகா (15), எழிலரசி (10) ஆகியோரும் சென்றனர்.

    3 பேரும் மோட்டார் சைக்கிளில் பிரிவுபசார விழாவின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் நோக்கி புறப்பட்டனர்.

    சத்தியமங்கலம் அருகே அன்னூர்கவுண்டர்தோட்டம் என்ற இடத்தில் வந்த போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், பவானிசாகர் நோக்கி சென்ற அரசு பஸ்சும் மோதிக்கொண்டன.

    இதில் கிருபைராஜ், சந்திரலேகா, எழிலரசி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே எழிலரசி பரிதாபமாக இறந்தார்.

    கிருபைராஜ், சந்திரலேகா ஆகியோர் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    பலியான எழிலரசி உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த கிருபைராஜ், சந்திரலேகா ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரலேகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கிருபைராஜ் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் பலியான சந்திரலேகா பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், அதே பள்ளியில் எழிலரசி 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    அவர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து அவர்களது பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. #tamilnews
    ×