search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Death"

    மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 20). இவரது நண்பர் குன்னூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (17). இருவரும் கூலி தொழிலாளிகள்.

    பாலகிருஷ்ணன் மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தவணை முறையில் பைக் வாங்கியிருந்தார்.

    இதற்கான பணத்தை செலுத்துவதற்காக பாலகிருஷ்ணன் தனது நண்பருடன் பைக்கில் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டார்.

    அங்கு தவணை தொகையினை செலுத்திவிட்டு இருவரும் மீண்டும் வீடு திரும்பினர். மேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது குன்னூரில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது.

    இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்,கிருஷ்டோபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த பால கிருஷ்ணன், ஸ்ரீகாந்த் ஆகியோரின் உடலைப்பார்த்து உறவினர்கள் கதறியழுத காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
    திருப்பத்தூர் அருகே இன்று நடந்த மஞ்சு விரட்டில் மாடுகள் முட்டித் தள்ளியதில் 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் மாணிக்கநாச்சியம்மாள் கோவில் உள்ளது.

    இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலை மஞ்சு விரட்டு நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை பார்வையிட்டனர்.

    இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    மஞ்சுவிரட்டின்போது காளைகள் தொழுவத்தில் அவிழ்த்து விடப்படுவது வழக்கம். இதற்கு மாறாக காளைகள் இன்று கண்டர மாணிக்கம் கண்மாயில் அவிழ்த்து விடப்பட்டன. இதனால் காளைகள் ஆங்காங்கே சிதறி ஓடி கண்மாய்களில் குவிந்திருந்த பார்வையாளர்கள் மீது முட்டித்தள்ளியது.

    இதில் அமராவதி புதூரைச்சேர்ந்த சேவுகன் (வயது 48), வலையபட்டி ராசு (23), அழகாபுரி சின்னசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே சேவுகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வலையபட்டி ராசு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அழகாபுரி சின்னசாமி கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த மஞ்சு விரட்டில் 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மஞ்சுவிரட்டின் போது பார்வையாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களில் காய்ச்சலுக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். #Denguefever #Swineflu
    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (32). இவர் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இவரது சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கதிர்வேல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிர் இழந்தார்.

    சேலத்தை சேர்ந்தவர் ராஜ் குமார் (39). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றி, வைரஸ் காய்ச்சலுக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். #Denguefever #Swineflu
    சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பெரியப்பாவுடன் சென்ற அக்காள் தங்கை பலியாயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் சிறுமுகை, காந்தவயலை சேர்ந்தவர் கிருபைராஜ் (வயது 47). இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள தனியார் பஞ்சு மில்லில் அதிகாரியாக உள்ளார்.

    நேற்று இரவு சத்தியமங்கலத்தில் அதிகாரி ஒருவரின் பிரிவுபசார விழாவின் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கிருபைராஜ் கலந்து கொள்ள இருந்தார்.

    இதற்காக அவர் பவானிசாகருக்கு வந்தார். பவானிசாகர் நால்ரோட்டில் உள்ள தனது தம்பி பவானி சங்கர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்து பிரிவுபசார விழா விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். அவருடன் பவானிசங்கரின் மகள்களான சந்திரலேகா (15), எழிலரசி (10) ஆகியோரும் சென்றனர்.

    3 பேரும் மோட்டார் சைக்கிளில் பிரிவுபசார விழாவின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் நோக்கி புறப்பட்டனர்.

    சத்தியமங்கலம் அருகே அன்னூர்கவுண்டர்தோட்டம் என்ற இடத்தில் வந்த போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், பவானிசாகர் நோக்கி சென்ற அரசு பஸ்சும் மோதிக்கொண்டன.

    இதில் கிருபைராஜ், சந்திரலேகா, எழிலரசி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே எழிலரசி பரிதாபமாக இறந்தார்.

    கிருபைராஜ், சந்திரலேகா ஆகியோர் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    பலியான எழிலரசி உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த கிருபைராஜ், சந்திரலேகா ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரலேகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கிருபைராஜ் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் பலியான சந்திரலேகா பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், அதே பள்ளியில் எழிலரசி 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    அவர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து அவர்களது பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. #tamilnews
    சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

    இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவில் மாங்காய் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவை காஞ்சீபுரம் மாவட்டம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 48) ஓட்டினார். அவருடன் சேம்பலிபுரத்தை சேர்ந்த கண்ணன்(25) வந்தார். மரக்காணம் செட்டிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ஆட்டோ வந்த போது எதிரே ஒரு டேங்கர் லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியது.

    இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த டிரைவர் சண்முகம் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டேங்கர்லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×