search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government bus accident"

    • விபத்து ஏற்பட்ட அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    திருப்பூர்:

    தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்ட சிறப்பு அரசு பேருந்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையம் வந்தடைந்தது. முருகேசன் என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பஸ் டெப்போவிற்கு பேருந்தை எடுத்து சென்றுள்ளார்

    அப்போது அதிவேகமாக வந்த பேருந்து திருப்பூர் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த ரோட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    உடுமலையில் அரசு பஸ்சும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 வாலிபர்கள் பலியாயினர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வெங்கடேசா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 25). கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் ராஜகவின் (27), அருண் (24). இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மடத்துக்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு உடுமலை- பழனி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து செங்கோட்டைக்கு அரசு பஸ் சென்றது. பெரியகோட்டை பிரிவு என்ற இடத்தில் வந்தபோது பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதில் பார்த்திபன், ராஜகவின் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். அருண் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பார்த்திபன், ராஜகவின் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×