search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர்கள் சந்திப்பு"

    • 1995-1997-ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி 142 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1995-1997-ம் கல்வி ஆண்டில் 11 முதல் 12ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    1995-1997-ம் கல்வி ஆண்டில் 11 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வெள்ளிவிழா நிகழ்ச்சியை நடத்தினர்.

    பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி அப்போது பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் அலுவலகப் பணியாளர் களையும், தற்போதைய ஆசிரியர்களையும் குடும்பத்தோடு பங்கேற்று அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பழைய நினைவு களை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு நினைவுப் பரிசுகளை வழங்கினர். பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியதுடன் வெள்ளி விழா நினைவாக பள்ளிக்கு சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் வழங்கியதுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில், குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி கல்வி அபிவிருத்தி சங்க செயலர் கோட்டை சண்முகநாதன், பள்ளி செயலர் முத்தையா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தியாகச்செல்வன், துணைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிர்வாக குழு உறுப்பினர் கோட்டை கணேசன்,

    தலைமை ஆசிரியர் முத்து சிவன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி, முன்னாள் ஆசிரியர்கள் விஸ்வநாதன், பட்டுப் பாண்டி, வைகுண்டராமன், தொழிலதிபர் கணேசன், பார்த்திப சங்கர், குமார வேல், முன்னாள் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
    • மரக்கன்றுகள் நட்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 1960ம்ஆண்டு முதல் 2022 ம்ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சந்தித்துக் கொண்டனர் பின்னர் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து மகிழ்ந்தனர், பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது உள்ள ஆசிரியர்களை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ..எஸ். கோவிந்தன் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி, மதியழகன், முன்னாள் எம்பி பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், உள்படை ஏராளமான கலந்து கொண்டு பேசினார்கள் பள்ளியில் படித்து தற்போது அரசு உயர் பதவிகள் மற்றும் தொழிலதிபர்களாக உள்ளவர்கள் தங்கள் செய்கின்ற பணிகள் குறித்து தெரிவித்து மகிழ்ந்தனர், பள்ளியில் மறைந்த முதல் தலைமை ஆசிரியர் கே.ராமமூர்த்தி, படத்தினை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியினை பெற்றோர்ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர் எம் தேவராஜ், கணினி ஆசிரியர் டி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்கள் அனைவருக்கும் பொன்னா டை போர்த்தினார்கள் பின்னர் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டும் பள்ளி மேம்பாட்டிற்கு பண உதவி மற்றும் ஆலோசனை களை வழங்கினார்.

    பின்னர் முன்னாள் மாணவர்களுக்கான சங்க தலைவர் மற்றும் நிர்வாகி களை தேர்ந்தெடுத்தனர் பின்னர் பழைய மாணவ மாணவிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தற்போதைய ஆசிரியர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 150-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
    • தலைமையாசிரியருக்கு நினைவு பரிசு வழங்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சியில் 1951-ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    கடந்த 1984-85ம் ஆண்டில் 10 ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 37 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் அப்பள்ளியில் படித்த 150-க்கும் மேற்பட்டவர்கள் இன்று அரசு மற்றும் பல்வேறு தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் சுயதொழில் புரிபவர்கள் என பலரும் சந்தித்து பள்ளி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பலரும் தங்களது நண்பர்களுடன் செல்பி எடுத்தும் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்தனர். முன்னதாக காலையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி காலத்தில் தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி தலைமை யாசிரியருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    • மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1991-1992-ம் ஆண்டில் 10- ம் வகுப்பு படித்த மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் மாணவ- மாணவியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1991-1992-ம் ஆண்டில் 10- ம் வகுப்பு படித்த மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் எம். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சரவணன்காந்தன், சரவணகுமார், ராஜூ, வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் பழனிச்சாமி, ராமலிங்கம், ஆறுமுகம், கல்யாணி, உஷாராணி, ருத்ரமூர்த்தி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் 30 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட மாணவ-மாணவியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பள்ளி பருவ நிகழ்வுகளையும் தற்போதைய குடும்ப நிகழ்வுகளையும் மகிழ்ச்சியையும் சந்தோஷமாக வெளிப்படுத்திக் கொண்டனர்.

    ஆசிரியர்கள் அப்பொழுது பள்ளி பருவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பேசினர்.

    பள்ளியில் படித்த நினைவாக மாணவி விஜயஸ்ரீ நினைவுப்பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் மோகன், முன்னாள் மாணவர்கள் வேலுச்சாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவசாமி மற்றும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் 85 பேர் கலந்துகொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    • 1979-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டுவரை படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் நண்பர்களை சந்தித்தது புத்துணர்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    பழனி:

    பழனி சிறுமலர் நடுநிலைப்பள்ளியில் 1979-ம் ஆண்டுமுதல் 1987-ம் ஆண்டுவரை படித்த மாணவர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கினர். இதில் முன்னாள் மாணவர்களை இணைத்து அவர்களை சந்திப்பதற்காக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். சிறுமலர் பள்ளியில் படித்த மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாவும், வக்கீல், ஆசிரியர், தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

    பலர் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்ளனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் குழந்தைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் நண்பர்களை சந்தித்தது புத்துணர்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ×