search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்ஜாமின்"

    ஸ்ரீரங்கம் கோவில் சிலை காணாமல் போனதாக கூறப்பட்ட வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #idolmissing
    சென்னை:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோவிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல, பாரம்பரிய கட்டிடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2017-ம் ‘யுனஸ்கோ’ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுள்களுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்த டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 

    அந்த மனுவில், ‘ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் உட்பட பல கோயில் திருப்பணி குழுக்களில் இருந்துள்ளேன். ஸ்ரீரங்கம் கோயில் சிலை விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். 
    வாகன சோதனையின் போது தகராறு செய்தவர் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ய, கையை கட்டி எஸ்.ஐ முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    மதுரை:

    சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் நடந்த வாகன சோதனையின் போது சென்னையை சேர்ந்த ராஜராஜன் என்பவர் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என ராஜராஜன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருக்குறுங்குடி எஸ்.ஐ முன் கைகட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போலீசார் ராஜராஜன் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை எனவும் உத்தரவிட்டார். 
    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அநாகரீகமான கருத்துக்களை பகிந்த எஸ்.வி சேகருக்கு முன்ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. #SVeShekher
    புதுடெல்லி:

    நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் சில வாரங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரீகமான கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிந்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீஸ் தன்னை கைது செய்யலாம் என்ற நிலையில், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு அவர் தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று வரை அவரை கைது செய்ய தடை விதித்திருந்தனர்.

    இன்று அவரது மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 30-ம் தேதியே அவர் மீது குற்றப்பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.

    இதனை அடுத்து, சேகர் விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×