search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் முக ஸ்டாலின்"

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை.
    • திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

    திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குபிறகு முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகின்றன

    • ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • கூடுதல் நிதியை 13 பேர் குடும்பத்துக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

    மேற்படி அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16-11-2022) உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ அவர்களின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.

    சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த மற்றும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தன் அன்பிற்குரிய தாயின் இனிய நினைவுகளில் அவர் ஆறுதல் பெறட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார்.
    • கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை.

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார்.

    இந்த மாநாட்டில் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவது, தகுதி வாய்ந்த பேராசிரியர்களை நியமிப்பது, பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிப்பது, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

    • 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார்.
    • திமுக தலைவராக பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து.

    திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவுபெற்றதையொட்டி மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

    2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

    இந்நிலையில், திமுக தலைவராக பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அவர் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் வாழ்த்து.

    இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து, அவரது மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இயக்குநர் பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்கனவே தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதிராஜாவின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 24-ம் தேதி காலை அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
    • திருப்பூரில் 25-ம் தேதி சிறு, குறு தொழில்நிறுவனங்களின் தொழிலுக்கு தோள்கொடுப்போம் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    முதலில், வரும் 23-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார். அங்கு 24-ம் தேதி காலை அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    24-ம் தேதி மாலை பொள்ளாச்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிறகட்சியினர் திமுகயில் இணைகின்றனர். திருப்பூரில் 25-ம் தேதி சிறு, குறு தொழில்நிறுவனங்களின் தொழிலுக்கு தோள்கொடுப்போம் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    26-ம் தேதி ஈரோட்டில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு முதல்வர் ஸ்டாலின் மாலையில் சென்னை திரும்புகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
    • சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஓகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய், உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

    காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விட்டுள்ளனர். மேலும் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    ×