search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soniya gandhi"

    • 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் இலக்கை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் அடைய வேண்டும்.
    • காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனது இன்னிங்ஸ் "பாரத் ஜோடோ யாத்ரா" மூலம் நிறைவடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, ராகுல்காந்தி, மூத்த தலைவர்கள், பிரியங்கா காந்தி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, "சிறுபான்மையினர், பெண்கள், தலித்கள் மற்றும் பழங்குடியினர் மீது பாஜக குறிவைத்து வெறுப்பு நெருப்பை தூண்டுகிறது" என்றார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    தொழிலதிபர் கௌதம் அதானியின் வணிக சாம்ராஜ்யம் தொடர்பான சர்ச்சையில் தொழிலதிபருக்கு ஆதரவாக பாஜக அரசு பொருளாதார அழிவை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, அது அனைத்து மதங்கள், சாதிகள் மற்றும் மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. அவர்கள் அனைவரின் கனவுகளையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். காங்கிரஸுக்கும் நாட்டிற்கும் இது மிகவும் சவாலான நேரம். பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

    சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை பாஜக கடுமையாக குறிவைத்து வெறுப்பு நெருப்பை தூண்டுகிறது.

    அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பில் பொதிந்துள்ள மதிப்புகளை அவமதிப்பதைக் காட்டுகிறது.

    2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் இலக்கை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் அடைய வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களை காந்தி வலியுறுத்துகிறேன்.

    பாஜக ஆட்சியை நாம் வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களிடம் நமது செய்தியை தெளிவுடன் தெரிவிக்க வேண்டும். நம் தனிப்பட்ட லட்சியங்களை ஒதுக்கி வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

    இன்றைய சூழ்நிலை நான் முதன்முதலில் பாராளுமன்றத்தில் நுழைந்த காலத்தை நினைவூட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனது இன்னிங்ஸ் "பாரத் ஜோடோ யாத்ரா" மூலம் நிறைவடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீன ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஜனநாயகத்தை அவமரியாதை செய்வதாகும்.
    • இமாச்சல பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    பாராளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் முன்பு சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நமது எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்வது கவலைக்குரிய விஷயமாகும். சீனாவின் ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுக்கிறது. இது கண்டனத்திற்குரியது. தீவிர அக்கறையுள்ள விஷயங்களில் மவுனம் காப்பது சரியல்ல.

    சீனா நம்மை தொடர்ந்து தாக்க துணிவது ஏன்? இந்த தாக்குதலை தடுக்க என்ன தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் என்ன செய்ய வேண்டும்.

    எதிர்காலத்தில் சீன ஊடுருவுவதை தடுக்க அரசின் கொள்கை என்ன? சீனாவுக்கு நாம் ஏற்றுமதி செய்வதைவிட இறக்குமதி அதிகமாக செய்கிறோம். சீனாவின் ராணுவ விரோத போக்குக்கு பொருளாதார பதில் இல்லாதது ஏன்?

    இந்த மோதலில் இருதரப்பில் இருந்தும் ஒருசில வீரர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விவாதம் தேவை. இதை நாடே எதிர்பார்க்கிறது. பொது மக்களிடம் கொள்கைகளை, செயல்களை விளக்குவதும் அரசின் கடமையாகும்.

    சீன ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஜனநாயகத்தை அவமரியாதை செய்வதாகும். மேலும் அரசின் நோக்கங்களை மோசமாக பிரதிபலிக்கிறது.

    வெறுப்பை பரப்புவதன் மூலமும், சமூகத்தில் சில பிரிவினை குறிவைப்பதன் மூலமும் வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றாக நிற்பதை அரசு கடினமாக்குகிறது.

    இத்தகைய பிளவுகள் நம்மை பலவீனப்படுத்தி மேலும் பாதிப்படைய செய்துள்ளன. இதுபோன்ற சமயங்களில் மக்களை ஒன்றிணைப்பது அரசின் முயற்சியாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும். பிளவுபடுத்தக்கூடாது.

    எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அரசு தெரிவித்தபோதிலும் பொருளாதார நிலை தொடர்ந்து துயரத்தில் இருக்கிறது.

    டெல்லி, குஜராத் தேர்தல் முடிவுகள் துரதிருஷ்டவசமானது. இமாச்சல பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு சோனியா பேசினார்.

    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
    • அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என்றார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மோடி டுவிட்டரில் கூறும்போது, "சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • காங்கிரஸ் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும்.
    • காங்கிரஸ் தலைவராக தனது கடமையை தன்னால் இயன்றவரை செய்தேன்.

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையால் கட்சி வலுவடையும் என்று நம்புகிறேன்.

    புதிய காங்கிரஸ் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து தனது கடின உழைப்பின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு உயர்ந்திருப்பது தனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது.

    காங்கிரஸ் தலைவராக தனது கடமையை தன்னால் இயன்றவரை செய்தேன். இப்போது இந்தப் பொறுப்பில் இருந்து விடுபடுவதால் நிம்மதியாக இருக்கிறேன்.

    காங்கிரஸ் பல சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ அவர்களின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.

    சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த மற்றும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தன் அன்பிற்குரிய தாயின் இனிய நினைவுகளில் அவர் ஆறுதல் பெறட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சோனியா காந்திக்கு குறைந்த சுவாசக் குழாய் தொற்று நோய் பாதிப்பு.
    • சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது, கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சோனியா காந்திக்கு குறைந்த சுவாசக் குழாய் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அவரது சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது, கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சோனியா காந்திக்கு குறைந்த சுவாசக் குழாய் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால், சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவரின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை் தொடர்ந்து மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. இதனால் கடந்த 12-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    அவர் தற்போது கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மம்தா குறிப்பிட்டுள்ளார்.
    • கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதுடெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை இப்போதுதான் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சோனியா அவர்களே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
    • தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

    இந்நிலையில், சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இருப்பினும், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் கொடுக்கவே, காங்கிரஸ் அதனை ஏற்க மறுத்துள்ளது.
    புது டெல்லி:

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.

    பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.

    இதையடுத்து மாநில தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் படுதோல்விக்கு தானே பொறுப்பு ஏற்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.  காங்கிரஸ் கமிட்டி இதனை ஏற்க மறுத்துள்ளது. 
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்த, காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் சோனியா, ராகுல் ஆகியோர் பங்கேற்றனர்.
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. பா.ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.

    பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்கமுடியவில்லை.

    இதையடுத்து மாநில தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    இதை முறைப்படி அவர் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் இதை காரிய கமிட்டி ஏற்குமா? என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில்தான் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  

    முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் படுதோல்விக்கு தானே பொறுப்பு ஏற்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×