search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிவு"

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவருக்கு 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தார்.
    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது.

    இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேர், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேர் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. அதில், 15 ஆயிரத்து 879 மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். தேர்வு முடிவு அடிப்படையில் மாநிலத்தில் சேலம் மாவட்டம் 23-வது இடம் பிடித்துள்ளது. கடந்த காலங்களில் 10 முதல் 15 இடங்களுக்குள் வந்த சேலம் மாவட்டம் தற்போது 23-வது இடத்துக்கு சென்றுள்ளது.

    பிளஸ்-1 பாடங்களில் 1651 மாணவ- மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதில் பிரதான மொழிப்பாடமான ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். கணக்கு பாடத்தில் 45 பேர், இயற்பியல்- 34 பேர், வேதியியல்- 6 பேர், உயரியல்- 24 பேர், வணிகவியல்- 23 பேர், கணக்கு பதிவியல்- 63 பேர், பொருளியல்- 21 பேர், கணினி அறிவியல்- 29 பேர், கணினி பயன்பாடு- 58 பேர், செவிலியல்- 33 பேர், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியல் - தலா 6 பேர் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் 1,308 பேர் என மொத்தம் 1,651 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு சேலம் மாவட்டத்தில் 88.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    தேர்வு முடிவு வெளியீடு

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இன்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பிளஸ்-1 தேர்வு முடிவை வெளியிட்டனர். அதில், 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கமாக மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 15 ஆயிரத்து 879 பேர் மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    88.62 சதவீதம் தேர்ச்சி

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். அதில் மாணவர்கள் 82.47 சதவீதமும், மாணவிகள் 94.47 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளில் எண்ணிக்கை 114 ஆகும். 2020-ம் ஆண்டு 105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. ஆனால் 2021-2022 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கொண்டாட்டம்

    முன்னதாக இன்று காலை 9.30 மணி அளவில் 325 பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவு மதிப்பெண் விபரங்களுடன் ஒட்டப்பட்டது. தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவ- மாணவிகள் தங்களுடைய பிளஸ்-1 மதிப்பெண் விபரங்களை அறிந்து கொண்டனர்.

    பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்திலும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்பட்டது.

    பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ெசலுத்தி மாணவ- மாணவிகள் தாங்கள் எடுத்த மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர். மேலும் மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொண்டனர்.

    பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் தங்கள் வகுப்பறைகளில் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    சேலம் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய பனமரத்துப்பட்டி ஏரிைய சீரமைகும் பணி தொடங்கப்பட்டது.

    சேலம்:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக தீர்த்து வைத்த பெருமை இந்த ஏரிக்கு உண்டு. 1924-ம் ஆண்டு சேலம் மாநகருக்கென மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

    அதேநேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலமாக இருந்த பனமரத்துப்பட்டி ஏரியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ெஜயசங்கர், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கே படமானது குறிப்பிடத்தக்கது.

    இப்படி சிறப்பு வாய்ந்த பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவும், 168 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இந்த ஏரி தற்போது வரை சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் மற்றும் இதர வகை மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. தமிழக அரசு, இந்த ஏரியை பராமரிக்காததால் கருவேல மரங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன.

    இதனிடையே பனம–ரத்துப்பட்டி ஏரியின் நீரை, சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு குடிநீராக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார். இதையடுத்து அவர் பனமரத்துப்பட்டி ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மழைக்காலங்களில் ஜருகுமலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஏரியில் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்றும் வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

    இதனை ரூ.1.84 கோடிக்கு கருவேல மரங்களை வெட்டி எடுத்துக் கொள்ள சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கான ஒப்புதல் உள்ளிட்ட பணிகள் முடிவ–டைந்ததும், விரைவில் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×