search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பிளஸ்-1 பொதுத் தேர்வு ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவருக்கு 100-க்கு 100 மதிப்பெண்
    X

    பிளஸ்-1 பொதுத் தேர்வு ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவருக்கு 100-க்கு 100 மதிப்பெண்

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவருக்கு 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தார்.
    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது.

    இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேர், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேர் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. அதில், 15 ஆயிரத்து 879 மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். தேர்வு முடிவு அடிப்படையில் மாநிலத்தில் சேலம் மாவட்டம் 23-வது இடம் பிடித்துள்ளது. கடந்த காலங்களில் 10 முதல் 15 இடங்களுக்குள் வந்த சேலம் மாவட்டம் தற்போது 23-வது இடத்துக்கு சென்றுள்ளது.

    பிளஸ்-1 பாடங்களில் 1651 மாணவ- மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதில் பிரதான மொழிப்பாடமான ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். கணக்கு பாடத்தில் 45 பேர், இயற்பியல்- 34 பேர், வேதியியல்- 6 பேர், உயரியல்- 24 பேர், வணிகவியல்- 23 பேர், கணக்கு பதிவியல்- 63 பேர், பொருளியல்- 21 பேர், கணினி அறிவியல்- 29 பேர், கணினி பயன்பாடு- 58 பேர், செவிலியல்- 33 பேர், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியல் - தலா 6 பேர் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் 1,308 பேர் என மொத்தம் 1,651 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×