search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீ டூ இந்தியா"

    நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம்சாட்டியுள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
    இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.



    இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஸ்ருதி நிபுணன் படத்தில் அர்ஜுன் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து ஸ்ருதி ஹரிஹரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    எனக்கு பாலியல் தொல்லைகள் நடக்கும் போதெல்லாம் உடல் ரீதியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன், ஆனால் மனரீதியாக அது பயத்தை உண்டாக்கி என்னை பாதித்துவிட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து வெளிவர நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது இரு மொழிகளில் உருவாகி வந்த ஒரு படத்தில் நான் நடித்துவந்தேன். அதில் நடிகர் அர்ஜுன் சர்ஜா தான் நாயகன். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிப்பது குறித்து ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களுக்கு எனக்கு எதுவும் தோன்றவில்லை, அந்த படத்தில் நான் அவரது மனைவியாக நடித்தேன். 



    ஒரு நாள் படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு காட்சி இருந்தது. அதில் ஒரு நீளமான வசனத்திற்கு பிறகு நானும், அவரும் கட்டிப் பிடித்து நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை நாங்கள் ஒத்திகை பார்த்த போது, அர்ஜுன் திடீரென என்னை கட்டிப்பிடித்தார். என்னிடம் எதுவும் சொல்லாமல், என் அனுமதியை பெறாமல் என்னை கட்டி அணைத்து எனது பின் பகுதியில் மேலும், கீழும் அவர் கையை படறவிட்டார். என்னை மேலும் இறுக்கி அணைத்து, வேண்டுமென்றால் இந்த காட்சியை வைத்துக் கொள்ளலாமா என்று இயக்குநரிடம் கேட்டார்.

    சினிமாவில் காட்சிகள் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொள்வது தவறு. அவர் சினிமாவுக்காக அப்படி நடந்து கொண்டிருந்தாலும் அது தவறு தான். அவர் செய்தது எனக்கு அது பிடிக்கவில்லை, என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. 

    இவ்வாறு கூறியுள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja



    சங்கீத வித்வான் மீது ட்விட்டரில் பாலியல் புகார் கூறியுள்ள தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். #MeToo #TimesUp #SriRanjani
    சர்வதேச அளவில் பிரபலமான ‘மீ டூ’ இயக்கத்தை தமிழகத்தில் பாடகி சின்மயி தொடங்கிவைத்தார். அவர் வைரமுத்து மீது புகார் செய்ததால் மீ டூ இயக்கம் பிரபலமானது. தொடர்ந்து நடிகைகள், பாடகிகள், டிவி பெண் தொகுப்பாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    வில்லன் நடிகர் ஜான் விஜய் மீதும், கடம் வித்வான் உமா சங்கர் மீதும் டிவி பெண் தொகுப்பாளர் ஸ்ரீ ரஞ்சனி புகார் கூறினார். ஒரு பேட்டிக்காக அணுகியபோது சில நாட்கள் கழித்து நள்ளிரவில் போன் செய்து ஆபாசமாக பேசினார் என்று குற்றம் சாட்டினார்.

    ஜான் விஜய்யிடம் இது குறித்து கேட்டபோது ’சாக்கடையில் கல் வீசினால் நம் மீது தெறிக்கும் என்று சொல்வார்கள். இந்த வி‌ஷயம் குறித்துப் பேசுவதையும் சாக்கடையில் கல் வீசுவதற்கு நிகரானதாகவே நினைக்கிறேன்’ என கூறினார். அதேநேரம் ஜான் விஜய்யின் மனைவி தன் கணவரின் செயலுக்காக தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக ஸ்ரீரஞ்சனி கூறினார்.

    ஸ்ரீ ரஞ்சனி அளித்த பேட்டியில் ‘ஒரே ஒரு முறை நள்ளிரவில் என்னிடம் போனில் பேசிய ஜான் விஜய் அப்போதுதான் அத்துமீறி பேசினார். அது பற்றிதான் நான் டுவீட் செய்திருந்தேன்.



    என்னோட டுவிட்டை பார்த்து விட்டு ஜான் விஜய் மனைவி என்னிடம் பேசி அந்த சம்பவம் குறித்துக் கேட்டார். நானும் சொன்னேன். கடைசியில் ‘அவர் செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார். ஜான் விஜய் மனைவி தொடர்பு கொண்ட செயலை நான் பாராட்டுகிறேன்.

    அதேநேரம் ‘உமா சங்கர்’ தரப்பில் எனக்கு தெரிந்த சிலரை அணுகி, ‘ஸ்ரீரஞ்சனியிடம் பேசி, அந்த டுவிட்டை நீக்கச் சொல்லுங்கள் என்று பேசியிருக்கிறார்கள். என் நண்பர்கள் ‘இந்த வி‌ஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல் வருவது போல் தெரிகிறது. எனக்கு நடந்தது இந்த இரண்டு சம்பவங்கள்தான். இனி என்னிடம் இருந்து எந்த டுவிட்டும் வராது’ என்று கூறி இருக்கிறார். #MeToo #TimesUp #SriRanjani

    ‘மீ டூ’ இயக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் என மும்பையில் பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர். #MeToo #MeTooIndia
    இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

    இந்தியாவை உலுக்கி வரும் இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு தனி குழு ஒன்றை நியமிக்கவுள்ளது. இது ஒருபுறம் இருக்க பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இனி இணைந்து பணிபுரிய மாட்டோம் என இந்தி பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர்.

    பிரபல இந்திப்பட பெண் இயக்குனர்களான கொங்கனா சென் சர்மா, நந்திதாதாஸ், மேக்னா குல்சார், கவுரி ஷிண்டே, சோயா அக்தர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
    பெண்கள் மற்றும் இயக்குனர்கள் என்ற முறையில் ஒன்று சேர்ந்து ‘மீ டூ’ அமைப்புக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம். பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் அதை வெளிப்படையாகச் சொல்ல தொடங்கியிருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கப் புரட்சியாகும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகத் துணை நிற்போம். பெண்களுக்கு பணியிடங்களில் நேரும் கொடுமைகளுக்கு எதிராகவும், பாதுகாப்பு, சம உரிமை குறித்து இனி நாங்கள் பிரசாரம் செய்வோம். அதே நேரம் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுடன் இனி பணிபுரிய போவது கிடையாது.

    இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கைக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. #MeToo #MeTooIndia

    ×