என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
சங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்
Byமாலை மலர்20 Oct 2018 3:48 PM IST (Updated: 20 Oct 2018 4:37 PM IST)
சங்கீத வித்வான் மீது ட்விட்டரில் பாலியல் புகார் கூறியுள்ள தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். #MeToo #TimesUp #SriRanjani
சர்வதேச அளவில் பிரபலமான ‘மீ டூ’ இயக்கத்தை தமிழகத்தில் பாடகி சின்மயி தொடங்கிவைத்தார். அவர் வைரமுத்து மீது புகார் செய்ததால் மீ டூ இயக்கம் பிரபலமானது. தொடர்ந்து நடிகைகள், பாடகிகள், டிவி பெண் தொகுப்பாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
வில்லன் நடிகர் ஜான் விஜய் மீதும், கடம் வித்வான் உமா சங்கர் மீதும் டிவி பெண் தொகுப்பாளர் ஸ்ரீ ரஞ்சனி புகார் கூறினார். ஒரு பேட்டிக்காக அணுகியபோது சில நாட்கள் கழித்து நள்ளிரவில் போன் செய்து ஆபாசமாக பேசினார் என்று குற்றம் சாட்டினார்.
ஜான் விஜய்யிடம் இது குறித்து கேட்டபோது ’சாக்கடையில் கல் வீசினால் நம் மீது தெறிக்கும் என்று சொல்வார்கள். இந்த விஷயம் குறித்துப் பேசுவதையும் சாக்கடையில் கல் வீசுவதற்கு நிகரானதாகவே நினைக்கிறேன்’ என கூறினார். அதேநேரம் ஜான் விஜய்யின் மனைவி தன் கணவரின் செயலுக்காக தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக ஸ்ரீரஞ்சனி கூறினார்.
ஸ்ரீ ரஞ்சனி அளித்த பேட்டியில் ‘ஒரே ஒரு முறை நள்ளிரவில் என்னிடம் போனில் பேசிய ஜான் விஜய் அப்போதுதான் அத்துமீறி பேசினார். அது பற்றிதான் நான் டுவீட் செய்திருந்தேன்.
என்னோட டுவிட்டை பார்த்து விட்டு ஜான் விஜய் மனைவி என்னிடம் பேசி அந்த சம்பவம் குறித்துக் கேட்டார். நானும் சொன்னேன். கடைசியில் ‘அவர் செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார். ஜான் விஜய் மனைவி தொடர்பு கொண்ட செயலை நான் பாராட்டுகிறேன்.
அதேநேரம் ‘உமா சங்கர்’ தரப்பில் எனக்கு தெரிந்த சிலரை அணுகி, ‘ஸ்ரீரஞ்சனியிடம் பேசி, அந்த டுவிட்டை நீக்கச் சொல்லுங்கள் என்று பேசியிருக்கிறார்கள். என் நண்பர்கள் ‘இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல் வருவது போல் தெரிகிறது. எனக்கு நடந்தது இந்த இரண்டு சம்பவங்கள்தான். இனி என்னிடம் இருந்து எந்த டுவிட்டும் வராது’ என்று கூறி இருக்கிறார். #MeToo #TimesUp #SriRanjani
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X