search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னொளி கபடி போட்டி"

    • தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி.
    • தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளைளில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், நெல்லை மாவட்ட அமைச்சூர் கபடி கழக சேர்மனுமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.

    40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியினை தொடங்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி. இப்போட்டியில் தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்த்தாக் கெனிஷ்டன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவர் அருள், தக்காளி குமார், முன்னாள் திசையன்விளை நகர தலைவர் ராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை போரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய தொண்டரணி சங்கர், குமார், எழில் ஜோசப், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நாலுமாவடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற எஸ்.எம்.வி.கே.சி. அணிக்கு ரூ.50 ஆயிரமும், சுழற்கோப்பையும், வழங்கப்பட்டது.

    குரும்பூர்:

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறையும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகமும் இணைந்து 7-ம் ஆண்டு 'ரெடீமர்ஸ்' கோப்பைக்கான மாநில அளவிலான பொங்கல் பண்டிகை மின்னொளி கபடி போட்டி யை நடத்தினர்.

    போட்டிகள் நாலுமாவடி காமராஜ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர்.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நாலுமாவடி ஜெ.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-ம் இடத்தைப் பிடித்த அனத்தங்கரை அணிக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம், நான்காம் பரிசாக தூத்துக்குடி கரிகாலன், என்.எப்.சி. அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-வது இடத்தைப் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாங்காபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயிரமும், திண்டுக்கல் சக்தி கல்லூரி நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் 3-ம், நான்காம் பரிசை பெற்று தலாரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர்.

    விழா நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கினார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். ரொக்கப் பரிசையும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர், கபடி கழகச் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்வாரிய விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமையாசிரியர் திரு நீலகண்டன், அ.தி.மு.க. பிரமுகர்கள் திருப்பாற்கடல், விஜயகுமார், ராஜ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பணிக்க நாடார் குடியிருப்பு பிரபாகரன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி தலைவர் அழகேசன், அங்கமங்கலம் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளரும், அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்சார வாரியம் விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார், ஊழிய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×