search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி - வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்
    X

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் கபடி போட்டியை தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறினார்.

    திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி - வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்

    • தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி.
    • தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளைளில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், நெல்லை மாவட்ட அமைச்சூர் கபடி கழக சேர்மனுமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.

    40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியினை தொடங்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி. இப்போட்டியில் தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்த்தாக் கெனிஷ்டன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவர் அருள், தக்காளி குமார், முன்னாள் திசையன்விளை நகர தலைவர் ராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை போரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய தொண்டரணி சங்கர், குமார், எழில் ஜோசப், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×