search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் நிறுத்தம்"

    • காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
    • காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.

    எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன, இங்குள்ள தொழிற்சாலை நிறுவளங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக தொழிற்சாலைக்குச் செல்லும் மின்மாற்றி பழுதடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கி உள்ளன. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது காக்களூர் மற்றும் ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் இணைப்பை துண்டித்து அதனை காக்களூர் தொழிற்பேட்டைக்கு பகல் நேரத்தில் மட்டும் வழங்க இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அடுத்த நசரத் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று இரவும் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ரோட்டில் மரங்களை வெட்டிபோட்டு 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் இரு மார்க்கத்திலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் வெங்கல் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிரா மமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கிராமமக்களின் திடீர் மறியல் போராட்டத்தால் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன.
    • மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து பல இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. எனினும் அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம், ஈக்காடு, மணவாளநகர், புட்லூர், ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கட்டிடங்களின் மேல் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் கிழிந்து பறந்தன. சில இடங்களில் மின் கம்பங்களில் கிழிந்த பேனர்கள் தொங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலையில் பயணித்தனர்.

    மேலும் சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. திருவள்ளூர் பகுதியில் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மாலை 6 மணிக்கு சீரானது. ஆனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்த கிராமங்களில் விடிய, விடிய மின்தடையால் பொது மக்கள் தவித்தனர்.

    மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்று காரணமாக திருவாலங்காடு அடுத்த மணவூர் கிராமத்தில் சாலையோரம் மற்றும் வீடுகளில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் அந்த பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.

    மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்ற னர், இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,

    • பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    பாப்பிரெட்டிப்பட்டி, 

    தருமபுரி மாவட்டம், அரூர் மின்கோட்ட செய ற்பொறியாளர் பூங்கொடி வெளியிட்டு ள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜ் பாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்ப ம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 17-ந்தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி கோட்டம், பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 17-ந்தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சினனம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    • சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி கோட்டம் சோகத்தூர் துணை மின் நிலைய அதிகாரி வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கி ழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதன் காரணமாக வெண்ணாம்பட்டி குடியி ருப்பு, குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளிசந்தை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாைள மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இருக்காது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிசந்தை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரன அள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரன அள்ளி, சொட்டாண்ட அள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தன அள்ளி, கொலசன அள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, தப்பை, மதகிரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.

    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பைசுஅள்ளி, சோலைக்கொட்டாய் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட மின்சார வாரியம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பைசுஅள்ளி, சோலைக்கொட்டாய் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தருமபுரி நகரத்துக்குட்பட்ட பஸ் நிலையம், கடைவீதி, அன்ன சாகரம், ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ. ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் நகர், அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜாப்பேட்டை,

    சோலைக்கொட்டாய், நூல அள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, மாட்லாம்ப ட்டி, கெங்குசெட்டிபட்டி, காளப்பனஅள்ளி, குப்பங்கரை, வெள்ளோலை, முக்கள்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் அரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மாம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் மாம்பட்டி, அனுமன்தித்தம், கைலயரம், காட்டேரி, சட்டையாம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி புதுர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரி ப்பட்டி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கிழானூர்,

    வேப்பம்பட்டி, திர்த்த மலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடி பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியம்பட்டி, வேப்பப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி, சின்னகொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜி கொத்தூர், பதிமடுகு, நல்லூர், நேரலகிரி, தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகு ப்பம், வேப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி, நரணிகுப்பம், முஸ்லீம்பூர், தடத்தாரை, சாதனப்பள்ளி, நெடுசாலை, சென்னசந்திரம், இ.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிபட்டி, நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, கே.மோரூர், கண்ணப்பாடி, கே.என்.புதூர், வத்தல்மலை, கொண்டர அள்ளி, ரேகடஅள்ளி, திப்பிரெட்டிஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை (8-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், வியாசர்பாடி பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அம்பத்தூர் பகுதியில் என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி, வானகரம் ரோடு, சங்கர் சீலிங்க் ரோடு, வெள்ளாளர் தெரு, நலபள்ளி சாலை, பள்ளி சாலை, சந்தோசம் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    வியாசர்பாடி பகுதியில் செம்பியம் கே.கே.ஆர். நகர், சத்தியராஜ் நகர், ராயல் அவென்யூ, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, பர்மா காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், எர்ரண்டப்பள்ளி, பேட ப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, செம்பரசனப்பள்ளி, போடூர், திருமலைகோட்டா, அட்டகுறுக்கி, கோபசந்திரம், தியாரசனப்பள்ளி, ஏ.செட்டிப்பள்ளி, பங்காநத்தம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×