search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் திருட்டு"

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பில்லர் பாக்சினை திறந்து பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றது தெரியவந்தது.
    • பியூஸ் கேரியரை திருடிய 3 பேரையும் அடையாளம் காணும் பணியும், அவர்களை வலைவீசியும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தானே புயல் காரணமாக 30 நாட்கள் வரை பொதுமக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய அரசு அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மாவட்டமான கடலூர் மாவட்டத்தின் தலைநகர் கடலூருக்கு புதை வழி மின்சாரம் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் நகரின் ஒரு பகுதியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதைவட கேபிள் பணிகளுக்கான பியூஸ் கேரியர்கள் ஆங்காங்கே உள்ள பில்லர் பாக்ஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கடலூர் மஞ்சக்குப்பம், கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை மின்சாரம் தடைபட்டது. மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்றிருந்த அப்பகுதியினர், விடிந்த பிறகும் மின்சாரம் வராததால் மின் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் அவர்கள் வந்து பார்த்த போது பில்லர் பாக்ஸ்களிலிருந்து பியூஸ் கேரியர்களை காணவில்லை. இது தொடர்பாக அவர்கள் கடலூர் புதுநகர் போலீசாரிடம் புகாரளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பில்லர் பாக்சினை திறந்து பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட பியூஸ் கேரியர் ஒன்று ரூ.900 என்பதால் இதனை அவர்கள் திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பியூஸ் கேரியரை திருடிய 3 பேரையும் அடையாளம் காணும் பணியும், அவர்களை வலைவீசியும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
    • என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்.

    பெங்களூரு:

    தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவருமான குமாரசாமியின் வீட்டிற்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு மின்சாரம் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை வீடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குற்றச்சாட்டு கூறியிருந்தது.

    இதை ஒப்புக்கொண்ட குமாரசாமி, மின்விளக்கு அங்காரம் செய்த தொழிலாளி இதை செய்துவிட்டதாகவும், இது தனது கவனத்திற்கு வந்ததும், சட்டவிரோத மின்சாரம் எடுக்கப்பட்டதை அகற்றும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.

    இந்த மின்திருட்டு குறித்து பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) கொடுத்த புகாரின்பேரில் குமாரசாமி மீது ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை குமாரசாமி திருடிவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. மேலும் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலக சுவர்களில் ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருட்டுத்தனமாக 71 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதாக குமாரசாமிக்கு ரூ.68 ஆயிரத்து 526 பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) அபராதம் விதித்தது. அந்த அபராத தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், நான் செய்யாத தவறுக்காக என்னை மின்சார திருடன் என்று சொல்கிறார்கள். நான் அபராதம் செலுத்தியுள்ளேன். இப்போதாவது என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். நான் காங்கிரஸ் தலைவர்களை போல் பெரிய திருடன் அல்ல என்றார்.

    ×