search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பங்கம்"

    • பழுடைந்த மின்கம்பங்களை முன்னுரிமை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும்.
    • யூரியா 2 ஆயிரத்து 281 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 766 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 736 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 460 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 194 மனுக்கள் அளிக்கப்பட்டன.

    கூட்டத்தில் கலெக்டர் வினீத் பேசும்போது, நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2 ஆயிரத்து 281 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 766 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 736 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 460 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறப்படடது. ஆனால் மின்கம்பங்களை மாற்றாமல் உள்ளனர். ஒதுக்கீடு செய்யப்படும் மின்கம்பங்களை வேறு பணிக்கு வழங்காமல் பழுடைந்த மின்கம்பங்களை முன்னுரிமை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும். இதில் தீவிர கவனம் செலுத்தி அடுத்து வரும் கூட்டத்தில் அனைத்து விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸி, இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • மதுரை மண்டலத்தில் 6100 மின்கம்பங்கள் மாற்றம் தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    • இதற்காக மண்டலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்தடை பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் உதவிப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பழுதான மின் கம்பங்கள் மற்றும் பணி தொடங்கியது. இதனை மதுரை மண்டல தலைமை பொறியாளர் உமாதேவி ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமெங்கும் பழுதான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அதனடிப்படியில் முதற்கட்டமாக உயர்அழுத்த மின்பாதையில் உள்ள மின்கம்பங்களை மாற்றும் பணியை தொடங்கியுள்ளோம். மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதான மின்கம்பங்கள் 3100, புதிதாக அமைக்கும் மின்கம்பங்கள் 3,000 என மொத்தம் 6 ஆயிரத்து 100 மின்கம்பங்களும் ஜூலை 15 -ம் தேதிக்குள் மாற்றிவிட இலக்கு நிர்ணயம் செய்து பணிசெய்து வருகிறோம்.

    மேலும் மின்பாதைகளில் உள்ள மரங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதற்காக மண்டலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்தடை பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×