search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதக்கும் எல்இடி திரை"

    • வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
    • மிதக்கும் எல்இடி திரையின் முழு திரையின் நீளம் 69 அடி ஆகும்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (ஜனவரி 22ம் தேதி) மிக விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமோனோர் அழைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

    பிரான் பிரதிஷ்டை என்று கூறப்படும் இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப அயோத்தியில் உள்ள சரயு காட்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஒளி-உமிழும் டையோட்கள் (எல்இடி) மிதக்கும் திரை நிறுவப்பட்டுள்ளது.

    மிதக்கும் எல்இடி திரையின் முழு திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி ஆகும். பக்தர்கள், பிரதிஷ்டை விழாவை நேரடியாக ஒளிபரப்ப குஜராத் நிறுவனம் திரையை உருவாக்கியுள்ளது.

    இதுகுறித்து மிதக்கும் எல்இடி திரையின் எம்டி அக்ஷய் ஆனந்த் கூறியதாவது:-

    இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் எல்இடி திரையை குஜராத் நிறுவனம் ஒன்று ஜனவரி 22ம் தேதி நடைபெறும் வரலாற்று நிகழ்வுக்காக தயாரித்துள்ளது. இதில், பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரடியாக சரயு காட்டில் இருந்து நேரடியாக காண்பிக்கப்படும்.

    இந்த முழு திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி., இது முழு மிதக்கும் எல்இடி திரை தோராயமாக 1100 சதுர அடியாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×