search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டுவண்டி"

    • தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 57 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

    மாட்டு வண்டி பந்தயம் நடு மாடு, பூஞ்சிட்டு, பெரிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக நடந்தது.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.நடு மாட்டு பிரிவில் சசிகுமாரும், பூஞ்சிட்டு, பெரியமாடு பிரிவில் நல்லாங்குடி முத்தையாவும், கரிச்சான் பிரிவில் பாப்பன்கோட்டை பாக்கியம் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்தி ருந்தனர்.

    போட்டியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

    • கூத்தங்குடியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கூத்தங்குடி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ லண்டன் முனீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 53 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 44 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை கூத்தங்குடி கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


    • சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி இந்த பந்தயம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பெரியமாடு, கரிச்சான் மாடு ஆகிய 2 வகையான காளைகள் போட்டியில் பங்கேற்றன. பந்தய காளைகளுக்கு ஏற்ப தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

    ராமநாதபுரம் மன்னர் பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தார். காளைகள் அ.காளாப்பூர்- திருப்பத்தூர் சாலையில் சீறிப்பாய்ந்து இலக்கை எட்டின. வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையா ளர்களுக்கு முறையே ரூ.33 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.27 ஆயிரத்து 777, 3-ம் பரிசாக ரூ.21 ஆயிரத்து 111, 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரத்து 666 வழங்கப்பட்டது.

    கரிச்சான் மாட்டில் 44 ஜோடி மாடுகள் பங்கேற்றதால். 2 போட்டிகளாக பிரித்து நடத்த ப்பட்டது. அதில் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.23 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.19 ஆயிரத்து 999, 3-ம் பரிசாக ரூ.16 ஆயிரத்து 666, 4-ம் பரிசாக ரூ.5 ஆயிரத்து 555 வழங்கப்பட்டது.

    • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இந்த போட்டியை ஏராளாமான கிராம மக்கள் கண்டுகளித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் உள்ள நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் ஆவணி சுற்றுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    இதில் 2 பிரிவுகளாக பெரியமாடு, சின்னமாடு பந்தயம் நடந்தது. இதில் பெரியமாடு பந்தயம் 8 மைல் தூரமும், சிறிய மாட்டு வண்டி பந்தயம் 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 25 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

    பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இடையன்காடு பரணி மாட்டுவண்டி முதலிடமும், பழவரசன் ஆறுமுகம் மாட்டுவண்டி 2-வது இடமும், ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர் இ.எம்.எஸ். முகமது, பொய்யாநல்லூர் அயன் அஸ்ஸாம்மாட்டு வண்டிகள் 3-வது இடமும் பிடித்தன.

    தேனி மாவட்டம் போடி சின்னக்காளைத்தேவர் பதனக்குடி சிவசாமி உடையார்மாட்டுவண்டி 4-வது இடமும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் பிரவீன் சாத்தம்பத்தி சரவணன் மாட்டுவண்டி முதலிடமும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி மருதுபிரதர்ஸ் மாட்டுவண்டி 2-வது இடமும், சிவகங்கை மாவட்டம் வெளிமுத்தி வாஹினி மாட்டுவண்டி மற்றும் மதுரை மாவட்டம் பரவை சிலைகாளி அம்மன்மாட்டுவண்டி 3-வது இடமும், தேனி மாவட்டம் போடி சின்ன க்காளைத்தேவர் மாட்டுவண்டி, கோட்டவயல் ராஜ்குமார் பதனக்குடி அருணாசலம் மாட்டு வண்டி 4-வது இடமும், பிடித்தன. வெற்றி பெற்ற மாட்டுவண்டி மற்றும் உரிமையாளர்களுக்கு வேட்டி, துண்டு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளாமான கிராம மக்கள் கண்டுகளித்தனர்.

    • சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தில் கருப்பையா சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி, புறா பந்தயம் நடந்தது.
    • விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தில் கருப்பையா சாமி கோவில் உள்ளது. இங்கு புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி, புறா பந்தயம் நடந்தது.

    இப்பந்தயத்தை தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அல்லூர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரியமாடு மற்றும் சிறிய மாடுகளுக்கு பந்தயத்தூரம் முறையே 7, 9 கி.மீ. என்று நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதனைதொடர்ந்து குதிரைவண்டி பந்தயமும் நடந்தது. குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதேபோன்று பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக ரூ 8 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறிய மாடுகளுக்கான பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசு தொகையை விழாகமிட்டியார் வழங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • ஊமச்சிகுளத்தில் தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்.

    அவனியாபுரம்

    மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு இன்று மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பெரியமாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில் பெரியமாடு பிரிவில் முதல் பரிசை இரட்டை மாட்டு வண்டிக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 99 ரொக்கப் பரிசை அவனியாபுரம் மோகனசாமிகுமார் வண்டி பெற்றது.

    2-வது பரிசை தூத்துக்குடி விஜயகுமார் வண்டி ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 99-ஐ பெற்றது. 3-வது பரிசை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வேப்பங்குளம் கண்ணன் மாட்டுவண்டி ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99ஐ பரிசாக பெற்றது.

    சிறிய மாட்டு பிரிவில் முதல் பரிசு பெற்ற மாட்டு வண்டிக்கு ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99ம், 2-வது பரிசு பெற்ற மாட்டுக்கு ரூ.ஒரு லட்சத்து 99-ம், 3-வது பரிசு பெற்ற மாட்டுக்கு ரூ. 75 ஆயிரத்து 99 ரூபாயும் வழங்கப்பட்டன.

    விறுவிறுப்பாக நடந்த இந்த பந்தயத்தை திரளானோர் கண்டு களித்தனர்.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம், வெற்றிக் கோப்பை மற்றும் நாட்டு மாடு கன்றுக்குட்டிகளை அமைச்சர் பி.மூர்த்தி பரிசாக வழங்கினார். ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், இலக்கிய அணி நேருபாண்டியன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், நிர்வாகிகள் வக்கீல் கலாநிதி, சசிக்குமார், ஆசைக்கண்ணன், பூமிநாதன், ராஜவேல் சரண்யா, பூங்கோதை மலைவீரன், ஒத்தக்கடை சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×