search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்கு"

    • ரப்பர் பால் உற்பத்தி பாதிப்பு
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரண மாக குளுகுளு சீசன் நிலவு கிறது. மாவட்டம் முழுவதும் தினமும் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 59.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், மயிலாடி, நாகர்கோவில், இரணியல், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகள் நிரம்பி வரும் நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார் கள். பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக இருந்தது. அணைக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கல்குளம் தாலுகாவில் மேலும் 7 வீடுகள் சேதமடைந் துள்ளது. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோ ணம் பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப் பட்டுள்ளது. சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 51, பெருஞ்சாணி 22.8, சிற்றார் 1-47.8, சிற்றார் 2-59.4, பூதப்பாண்டி 6.2, களியல் 15, கன்னிமார் 3.2, மயிலாடி 3.2, நாகர்கோவில் 4.2, புத்தன் அணை 18.6, சுருளோடு 8.2, தக்கலை 36, இரணியல் 2, பாலமோர் 12.2, மாம்பழத்துறையாறு 41, திற்பரப்பு 37.9, அடையாமடை 5.1, ஆணைக் கிடங்கு 50.6.

    • இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று 3 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 15 மி.மீட்டரும், 24-ந் தேதி 12 மி.மீட்டரும், 25-ந் தேதி 40 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்தும், 24 மற்றும் 25-ந் தேதிகளில் மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

    இதனிடையே வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 64 சதவீதமாகவும் இருக்கும்.

    மழைக்கு வாய்ப்பு

    சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல் மற்றும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×