search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை கடை"

    • மளிகை கடை உரிமையாளர் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்தவர் பீட்டர் (46). இவர் மணிக்கூண்டு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    இன்று காலை பீட்டர் தனது 2 மகள்களை அழைத்து கொண்டு அய்யப்பன் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் மகள்களை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அய்யப்பன் நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி பீட்டர் மீது மோதியது.

    இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.

    பின்னர் பலியான பீட்டரின் உடலை மீட்டு பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எல்.இ.டி. டிவியையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றனர்
    • கடையில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அனந்தம் பாலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வயது 49 இவர் நேசமணி நகர் சைமன்காலனி பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் சுரேஷ் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்தபோது கடையில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ 13 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருந்தது.

    மேலும் எல்.இ.டி. டிவியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×