search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம் விளைவிக்கும் குற்றம்"

    • இந்த கொலை வழக்கு 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
    • உணர்ச்சி வசத்தால் கொலை நடந்துள்ளது என்றார் நீதிபதி

    கடந்த 2009 ஆகஸ்ட் 16 அன்று அல்மந்தா என்பவருக்கு தன் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அல்மந்தாவின் மனவி, அவரை தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த அல்மந்தா, தனது மனைவியை கத்தியால் குத்தினார். இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், 14 ஆண்டுகளாக நடைபெறும் அந்த வழக்கு இன்று டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நவ்ஜீத் புதிராஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர் கூறியதாவது:

    கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. மனைவி கணவனை தாக்கி உள்ளார். இதில் கோபமடைந்த போதுதான் கணவன் கத்தியால் அவரை குத்தியுள்ளார்; அதில் மனைவி உயிரிழந்து விட்டார். எனவே இதில் "முன்கூட்டியே திட்டமிடல்" (premeditation) என்பது பொருந்தாது. சூழ்நிலையை சாதகமாக்கி கொலை முயற்சியில் இறங்குவதையும் கணவன் செய்யவில்லை. கொடுமையாகவோ அல்லது குரூரமாகவோ தாக்குதலில் ஈடுபடவுமில்லை. ஆனால், தனது தாக்குதலால் மனைவி இறக்க நேரிடும் என்பதை அறிந்திருந்தார்.

    குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியில் ரத்த கறை இருந்திருக்கிறது. அதை அழிக்க கணவன் முயற்சி செய்யவில்லை.

    சண்டையில் உணர்ச்சி பெருக்கெடுத்து இந்த கொலை நடந்துள்ளது. கொலை செய்யும் எண்ணம் முன்னரே இருந்ததாக சாட்சியங்கள் இல்லை.

    கணவன் மீதும் காயங்கள் இருந்துள்ளது. தன் மீது ஏற்பட்ட தாக்குதலால் "திடீர்" என ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை பதிலுக்கு தாக்கி உள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் 302 பிரிவு இங்கு பொருந்தாது. அதற்கு பதில் 304 பாகம் 1 பிரிவில்தான் அவர் குற்றவாளி ஆகிறார்.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

    ×