search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கிளைகள்"

    • அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    களியக்காவிளை :

    குழித்துறை செயற்பொறி யாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    மார்த்தாண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக் கடை, காரவிளை, உண்ணா மலைக்கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும், அதனை சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    குறிப்பிட்ட நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பழமைவாய்ந்த பெரிய மரத்தின் கிளைகளை யாரோ சிலர் வெட்டியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சிலர் மரக்கிளைகளை வெட்டி சென்று விடுவதாக தெரிகிறது.

    அவினாசி:

    அவினாசி வ.வு.ச.,காலனி பகுதியில் செங்காடு திடல் உள்ளது. இங்கு அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது. இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சிலர் மரக்கிளைகளை வெட்டி சென்று விடுவதாக தெரிகிறது.

    இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள பழமைவாய்ந்த பெரிய மரத்தின் கிளைகளை யாரோ சிலர் வெட்டியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (11-ந் தேதி) நடக்கிறது.
    • பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி

    கன்னியாகுமரி :

    குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (11-ந் தேதி) நடக்கிறது. இதனால் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×