மார்த்தாண்டத்தில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (11-ந் தேதி) நடக்கிறது.பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி
மார்த்தாண்டத்தில் நாளை மின்தடை
Published on

கன்னியாகுமரி :

குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (11-ந் தேதி) நடக்கிறது. இதனால் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com