மார்த்தாண்டத்தில் நாளை மறுநாள் மின்தடை

அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மார்த்தாண்டத்தில் நாளை மறுநாள் மின்தடை
Published on

களியக்காவிளை :

குழித்துறை செயற்பொறி யாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

மார்த்தாண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக் கடை, காரவிளை, உண்ணா மலைக்கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும், அதனை சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குறிப்பிட்ட நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com