search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tree branch"

    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
    • ஆபத்தான நிலையில் இருந்த மரங்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக நாகை மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி சீயாத்தமங்கை ஊராட்சி மெயின்ரோடு பகுதியில் உயர் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை உரசி கொண்டும்,எந்நேரத்திலும் முறிந்து விழுந்து விபத்துக்க ளை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களையும் வெட்டி அகற்றும் பணி ஊராட்சி தலைவர் சிவகாமி அன்பழகன் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • மரக்கிளை தலையில் விழுந்து வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது22). சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வெம்பக்கோட்டை ரோட்டில் வேனில் வந்து கொண்டிருந்தார். வனமூர்த்திலிங்காபுரம் அருகே வந்தபோது மரக்கிளை முறிந்து வேன் மீது விழுந்தது.

    இதையடுத்து வேனை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது சகோதரர் பாலகுருநாதனை செல்போனில் அழைத்து அங்கு வருமாறு கூறினார்.அவர் அங்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து வேனில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மாரிமுத்து வேன் மீது ஏறி நின்று மரக்கிளைகளை எடுத்து கொடுக்க பாலகுரு நாதன் அதனை வாங்கி தரையில் வைத்து கொண்டி ருந்தார். அப்போது ஒரு மரக்கிளை எதிர்பாராத விதமாக பாலகுருநாதனின் தலையில் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த பாலகுருநாதனை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெம்பக் கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பழமைவாய்ந்த பெரிய மரத்தின் கிளைகளை யாரோ சிலர் வெட்டியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சிலர் மரக்கிளைகளை வெட்டி சென்று விடுவதாக தெரிகிறது.

    அவினாசி:

    அவினாசி வ.வு.ச.,காலனி பகுதியில் செங்காடு திடல் உள்ளது. இங்கு அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது. இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சிலர் மரக்கிளைகளை வெட்டி சென்று விடுவதாக தெரிகிறது.

    இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள பழமைவாய்ந்த பெரிய மரத்தின் கிளைகளை யாரோ சிலர் வெட்டியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பல கிராமங்களுக்கு மார்கெட் திடல் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
    • தீயணைப்பு படையினர் மரக்கிளையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், பல கிராமங்களுக்கு மார்கெட் திடல் வழியாக அரசு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலையோரத்தில் நின்ற ராட்சத சோலை மரத்தின் கிளை முறிந்து சாலையின் குறுக்கே தொங்கியபடி கிடந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து, மரக்கிளையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மரக்கிளையை அகற்றியதும் போக்குவரத்து சீரானது. மரத்தில் இருந்து கிளை முறிந்து விழுந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனமும் அந்த வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ×