மரக்கிளை தலையில் விழுந்து வாலிபர் பலி

மரக்கிளை தலையில் விழுந்து வாலிபர் பலியானார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்கிளை தலையில் விழுந்து வாலிபர் பலி
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது22). சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வெம்பக்கோட்டை ரோட்டில் வேனில் வந்து கொண்டிருந்தார். வனமூர்த்திலிங்காபுரம் அருகே வந்தபோது மரக்கிளை முறிந்து வேன் மீது விழுந்தது.

இதையடுத்து வேனை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது சகோதரர் பாலகுருநாதனை செல்போனில் அழைத்து அங்கு வருமாறு கூறினார்.அவர் அங்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து வேனில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மாரிமுத்து வேன் மீது ஏறி நின்று மரக்கிளைகளை எடுத்து கொடுக்க பாலகுரு நாதன் அதனை வாங்கி தரையில் வைத்து கொண்டி ருந்தார். அப்போது ஒரு மரக்கிளை எதிர்பாராத விதமாக பாலகுருநாதனின் தலையில் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த பாலகுருநாதனை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெம்பக் கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com