search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாடுதுறை"

    • இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவ தற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறை ந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    • விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுசான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின்ஒளி நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பதவி பொதுப் போட்டி முன்னுரிமையற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ண ப்பங்கள் 30.6.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

    கொரோனா பெருந்தோற்று காரணமாகக் அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை தமிழ்நாடு அரசு இரண்டாண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதன்படி 13.9.2021 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

    அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும் தாழ்த்த ப்பட்ட பழங்குடியினருக்கு 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி 8-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவ தற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறை ந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மேற்காணும் தகுதியுடை யவர்கள் தங்களின் விண்ண ப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2-வது தளம், செந்தில்பைப் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை-609001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுசான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின்ஒளி நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

    தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் கண்டி ப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் தொடங்கியது.
    • மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆசிரிய -ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை–ப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் தொடங்கியது.

    குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆசிரிய -ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பரமசிவம், சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி மற்றும் நாகராஜன் வளமைய ஜெயசங்கர் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திரளான ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறையில் வெற்றிலை வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாச்சிமுத்து நகரை சேர்ந்தவர் ரசாக்(வயது 65). வெற்றிலை வியாபாரி.

    இவர், கடந்த 7-ந் தேதி பையில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் உள்ள தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    மயிலாடுதுறை போலீஸ் நிலைய சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து கொண்டு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ரசாக் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அவர் மீது மிளகாய் பொடியை தூவினர். இதில் மிளகாய் பொடி கண்ணில் விழுந்ததால், அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், ரசாக்கிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். அப்போது பையில் இருந்த ரூ.30 ஆயிரம் மட்டும் கீழே விழுந்துவிட்டது.

    இதையடுத்து கொள்ளையர்கள் தங்கள் கையில் சிக்கிய ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் பணம் பறிப்பு சம்பவத்தில் ரசாக் தினமும் செல்லும் ஆட்டோவில் டிரைவராக இருக்கும் அமீன் (வயது 39) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேலும் அவரது ஆலோசனைப்படி சம்பவத்தன்று கூறைநாட்டை சேர்ந்த நஜீர் (35), கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாசர் (39) ஆகியோர் ரசாக்கிடம் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அமீன், நஜீர், நாசர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    ×