search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்றத்தினர்"

    • ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பள்ளி ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தினை தமிழ்நாடு அரசு விரைந்து நிறை வேற்றிட வலியுறுத்தி, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆசிரியர்கள் தாக்கப்படு வதும், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தர். மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இதில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டையை அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றுத் தர வேண்டும். ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    இறுதியில், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×