search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி கிரிராஜ் சிங்"

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
      
    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், இந்த பாலியல் புகாரால் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    அவரது மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு வர்மா சரணடைந்தார். அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பன்கேற்றது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவருக்கு பின்புறமாக மேடையின் முன்வரிசையில் மஞ்சு வர்மா அமர்ந்திருந்தார்.

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மத்திய மந்திரி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma  
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் மற்றும் உ.பி. துணை முதல் மந்திரி கேஷவ் புரசாத் மவுரியா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். #Ramtempleconstruction #AyodhyaRamtemple #GirirajSingh
    பாட்னா:

    பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    உலகத்தில் எந்த சக்தியாலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்த அவர், இந்தியாவில் வாழும் சுமார் 100 கோடி மக்களின் மதநம்பிக்கைக்கு மையப்புள்ளியாக இருக்கும் ஸ்ரீராமபிரானுக்கு அயோத்தியில் கோவில் கட்டும் விவகாரம் நீர்த்துகொண்டே போவதால் தங்கள் நம்பிக்கையை இழந்த மக்கள் தற்போது பொறுமையிழந்து விட்டார்கள். ஆனால், இதற்கான வழி பிறக்கும் என்றும் குறிப்பிட்டார்.

    இதேபோல், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேசம் மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை பா.ஜ.க. முன்னரும் ஆதரித்தது. இப்போதும் ஆதரிக்கிறது. எப்போதும் ஆதரிக்கும்.

    அயோத்தியில் ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்படும். அதற்கான வேளைவந்து ராமர் கோவில் கட்டப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். #Ramtempleconstruction #AyodhyaRamtemple #GirirajSingh
    ×