search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் குழுவினர்"

    • வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
    • மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும்,வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன.

    உடுமலை:

    தமிழ்நாட்டில் ஆதரவற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கான அடிப்படையை வழி நடத்த, மகளிர் குழுக்கள், அந்தந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் திட்டத்தின் தொகுப்பு வழிநடத்துநர்கள் வாயிலாக, குழுவினருக்கு, அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில், வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகின்றனர். மேலும் வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அதில், 50 சதவீத பெண்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். கல்வித்தகுதி இல்லாத பெண்களுக்கு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளை திட்டம் வழங்குகிறது. மகளிர் குழுவினருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வருமானம் ஈட்டும் வகையில், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும், மாவட்ட அளவில், அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளன. அங்காடிகளில், 10 சதவீதம் மட்டுமே இத்தகைய பொருட்கள் விற்பனை ஆகின்றன. கைவினைப் பொருட்கள் தயாரிப்பும், வெகுவாக குறைந்துவிட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றுப்பொருளாக இருக்கும், பாக்குமட்டை, பனை ஓலை, மூங்கில் கூடைகள், உள்ளிட்ட பல்வேறு வகைகளிலிருந்து, பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பதற்கு, மகளிர் குழுக்களை அரசு ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றனர். இதன் வாயிலாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கும், குழுவினரின் வாழ்வாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் அருகே மகளிர் குழுவினருக்கு மிளகாய் பொடி தயாரிக்கும் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.
    • மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குதரவை ஊராட்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தலைமையில் நடந்தது.

    மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுயதொழில் தொடங்கு வதற்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மிளகாய் பொடி தயாரிக்கும் எந்திரம் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    மகளிர்கள் மிளகாய்பொடி மற்றும் சமையல் பயன்பாட்டிற்கான பல்வேறு வகையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் பணியை தொடங்கி உள்ளது மகிழ்ச்சி தக்க ஒன்றாகும்.

    மகளிர் குழு உறுப்பினர்கள் முழுமையாக கவனம் செலுத்தி தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதுடன் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்படும் பொழுது உற்பத்தி திறன் அதிகரிப்பதால் வருமானம் அதிகரிக்கும்.

    இதன் மூலம் குழு உறுப்பினர்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதால் வங்கியில் பெற்ற கடனை எளிதாக திருப்பி செலுத்துவதுடன் மகளிர் குழுவிற்கும் நிலையான வருவாய் கிடைக்கும். அதேபோல் வங்கியில் கடனை சரியான காலத்திற்குள் செலுத்துவதன் மூலம் மேலும் கடன் உதவிகளை வழங்க வங்கி தயாராக இருக்கும்.

    எனவே இந்த பகுதியில் ஆரம்பித்துள்ள மகளிர் குழுவினர் தயாரிக்கும் பொருளை பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதுடன், வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு மற்ற மகளிர் குழுக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×