மகளிர் குழுவினரின் வாழ்வாதாரம் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும்,வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

தமிழ்நாட்டில் ஆதரவற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கான அடிப்படையை வழி நடத்த, மகளிர் குழுக்கள், அந்தந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் திட்டத்தின் தொகுப்பு வழிநடத்துநர்கள் வாயிலாக, குழுவினருக்கு, அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில், வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகின்றனர். மேலும் வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அதில், 50 சதவீத பெண்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். கல்வித்தகுதி இல்லாத பெண்களுக்கு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளை திட்டம் வழங்குகிறது. மகளிர் குழுவினருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வருமானம் ஈட்டும் வகையில், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும், மாவட்ட அளவில், அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளன. அங்காடிகளில், 10 சதவீதம் மட்டுமே இத்தகைய பொருட்கள் விற்பனை ஆகின்றன. கைவினைப் பொருட்கள் தயாரிப்பும், வெகுவாக குறைந்துவிட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றுப்பொருளாக இருக்கும், பாக்குமட்டை, பனை ஓலை, மூங்கில் கூடைகள், உள்ளிட்ட பல்வேறு வகைகளிலிருந்து, பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பதற்கு, மகளிர் குழுக்களை அரசு ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றனர். இதன் வாயிலாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கும், குழுவினரின் வாழ்வாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com