search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமை மாநாடு"

    • மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, பெண்கள் கல்வியில் முன்னேற அடித்தளமிட்டது அண்ணா மற்றும் கருணாநிதி அரசுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • காமராஜர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார்.

    சென்னை:

    தி.மு.க. சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டது அண்ணா மற்றும் கருணாநிதி தலைமையிலான அரசுகள் என்று குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியாகாந்தி, பெண்கள் கல்வியில் முன்னேற அடித்தளமிட்டது அண்ணா மற்றும் கருணாநிதி அரசுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்த பேச்சு மிகவும் துரதிருஷ்டவசமானது. அண்ணா, கருணாநிதிக்கு முன்பே தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார். தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். கிராமப்புறங்களில் இருக்கும் குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடக்கக்கூடாது என்ற அடிப்படையில் இந்த பள்ளிகளை திறந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பலமான அடித்தளத்தை அமைத்து இருந்தார். அவரை மறந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது.
    • மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும்.

    சென்னை:

    திமுக மகளிர் உரிமை மாநாட்டில் அவர் பேசிவருவதாவது:-

    பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் மகளிர் இட ஒதுக்கீடை பாஜக நடைமுறைபடுத்தாது . புதுச்சேரியில் பட்டியல் இன பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலை உள்ளது. மேலும் பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது.

    மத்தியரசின் கொள்கை முடிவுகளில் மகளிருக்கு இடமில்லை. இந்த மாநாட்டில் அறிவொளி பெற்ற தீபங்களாக மகளிர் அணியினர் பங்கேற்று உள்ளனர். ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் அவமதிக்கப்படுகிறார். மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. மேலும் டெல்லியில் போராடிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த மத்திய பாஜக ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை.

    மேலும் பேசிய அவர், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது. மேலும் படிக்கும் ஆர்வமுள்ள பெண்களை கைதூக்கி விட நிதியுதவி அளித்து வருகிறது திமுக அரசு. மேலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமை தொகை வழங்கியுள்ளது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில்தான் 11 பெண் மேயர்கள் உள்ளனர்,

    மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும், விளையாட்டு வீராங்கனைகளாக இருக்கட்டும், சாமானிய பெண்களாக இருக்கட்டும் எந்த நிலை பெண்களுக்கும் நீதி கிடைக்காது, என்றும் அவர் பேசினார்.

    • தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

      திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள தி.மு.க. கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், மகளிர் அணி துணைச்செயலாளரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனை ஒவ்வொரு வாக்குச்சாவடியாக மாவட்ட கழகம் வழங்கும் குறிப்பேட்டில் ஒவ்வொரு வாக்காளர் பெயருடன் பூர்த்தி செய்து, அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலோடு, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் மகளிரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாதந்தோறும் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இ    யங்க தேவையான நிதியை தமிழக அரசு வழங்க கேட்பது. நவம்பர் மாதம் 27-ந் தேதி இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது.சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் தெற்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது, டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தையொட்டி மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    ×