search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாப்பிள்ளையார்"

    • இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

    திருநாரையூரில் திருத்தலத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று இரவில் இங்குள்ள பொள்ளாப்பிள்ளையாருக்குப் பூஜை செய்யும்

    அதே சமயத்தில் பிரகாரத்தின் ஓரிடத்தில் குத்து விளக்கை ஏற்றி வானத்திலுள்ள சந்திரனுக்குப் பூஜை செய்து

    தீபாராதனை காட்டும்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள வன்னவேடு என்ற வன்னிக்காடு என்ற தலம் உள்ளது.

    இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.

    இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

    பவுர்ணமி அன்று மாதா புவனேஸ்வரிக்கு "லகுசண்டி" ஹோமம் செய்கிறார்கள்.

    இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கடத்திலிருந்து (கலசத்திலிருந்து) நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள்.

    இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்ததாக ஐதீகம்.

    பவுர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்களின்றிக் கட்டி முடிப்பார்கள்.

    • திருமூலரின் மகிமை மிகுந்த இடம் காட்டுமன்னார் கோவில் அருகிலிருக்கும் திருநாரையூர்.
    • திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய தலமும் இதுவாகும்.

    திருமூலரின் மகிமை மிகுந்த இடம் காட்டுமன்னார் கோவில் அருகிலிருக்கும் திருநாரையூர்.

    அங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் கோவிலில் திருமூலர் சந்நிதானம் என இவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

    திருவாவடுதுறைக்கு அருகே ஆடுதுறையிலிருந்து சில கி.மீ தொலைவில் உள்ள ஊர் சாத்தனூர்.

    மாடுமேய்க்கும் மூலன் என்பவனின் உடலுக்குள் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடமே சாத்தனூர்.

    அங்கு திருமூலருக்குத் தனியே கோவிலுள்ளது.

    பிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாகச் சேர்த்து, திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும், திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார்.

    அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி, சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது, திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

    திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய தலமும் இதுவாகும்.

    தேமான் பெருமாள் விக்கிரமபாண்டியன் போன்றோர் அருள்பெற்றதும் ஆவடுதண் துறையே.

    முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஈசன் மகப்பேறு அருளி இத்தலத்தில் திருவாரூர் காட்சியைக் காட்டியதாகத் தலபுராணம் உரைக்கின்றது.

    தரும தேவதை இடபமாக ஈசனைத்தாங்கும் பேறு பெற்ற தலம் இதுவாகும்.

    திருமூலர், திருமாளிகைத் தேவர் ஆகியோரின் அதிட்டானங்கள் இங்குதான் திகழ்கின்றன.

    ×