search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன் ராதாகிருஷ்ணன்"

    • தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை மதிக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அளவிற்கு நான் இல்லை. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி என்றும், எப்போதும் அப்படியே திகழ்வதற்கான வாய்ப்பு வரும் என நம்புகிறேன்.

    தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக ஏன் இதை சொல்லி இருக்கிறார் என தெரியவில்லை. நாங்களும் அவர்களோடு சமரசம் செய்யமாட்டோம். தமிழக மக்களும் தி.மு.க.விடம் சமரசம் செய்ய தயாராக இல்லை. தமிழக மக்களுக்காக தி.மு.க.வை எதிர்த்து போராடுவதற்கு பா.ஜ.க. எப்போதும் தயாராக உள்ளது.

    அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் போலீசார் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் என தெரியவில்லை. இதேபோல் எல்லா விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளார்களா? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

    கடந்த 2017-ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து அப்போது மத்திய மந்திரியாக இருந்த நான், அவரது உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது என் மீதும் செருப்பு வீசப்பட்டது. எனது காரிலும் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது.

    தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது சரியானது அல்ல. ஆனால் அமைச்சர் மீதே வீசி இருக்கிறார்கள் என்று சொன்னால், அன்று நானும் மந்திரியாக இருந்தபோதுதான் என் மீது செருப்பு வீசப்பட்டது. அப்போது அதனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒரு ஆவேசத்தில் மக்கள் இருக்கும்போது அதனை பெரிய மனதோடு விலகிச்செல்ல வேண்டும். மந்திரி மீது மட்டுமல்ல, சாதாரண மனிதன் யார் மீதும் செருப்பு வீசக்கூடாது.

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காபட்டணம் துறைமுகத்தில் இதுவரை 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த துறைமுகத்தில் நிரம்பி இருக்கக்கூடிய மணலை எடுக்க வேண்டும். அதன் பணிகளை தமிழக அரசு விரைவாக முடிக்க வேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. எல்லையை கண்காணிப்பதில் எந்த அளவிற்கு மற்றவர்கள் தயாராக இருக்கிறார்களோ, அதேபோல இந்திய எல்லையை பாதுகாப்பதில் நம்முடைய நாடும் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட தலைவர் கதிரவன், மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், ஆத்மா கார்த்திக், மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • மின்சிக்கனத்தை கடைபிடிக்க சூரியஒளி திட்டம் பரவல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
    • திமுக ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை முடித்துள்ளதாக தம்பட்டம் அடித்து கொண்டுள்ளது.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டியில் மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளில் 7 கோடி பேருக்கு மட்டுமே வங்கி கணக்கு இருந்தது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் எந்தவித செலவும் இல்லாமல் 45 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கி வைத்தவர் பிரதமர் மோடி. இரண்டரை கோடி பேருக்குவீடுகள் கட்டி கொடுத்துள்ளார். மின்சாரம் இல்லாமல் இருந்த 18 ஆயிரம் கிராமங்களுக்கு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 1000 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    மின்சிக்கனத்தை கடைபிடிக்க சூரியஒளி திட்டம் பரவல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகள் பயமுறுத்திய நிலை மாறி இந்தியாவை கண்டு அந்த நாடுகள் பயப்படும் நிலையை மோடி உருவாக்கி உள்ளார். எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டிற்கு இந்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

    கொரோனா தடுப்பூசியை இலவசமாக செய்து நமது உயிரை காப்பாற்றியவர் மோடி. தி.மு.க ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை முடித்துள்ளதாக தம்பட்டம் அடித்து கொண்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்பதாக கூறியவர்கள் இன்னும் அதனை தராமல் ஏமாற்றி வருகின்றனர். ஒரு லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கியதாக விழா எடுத்தனர். ஆனால் ஒருவருக்கும் அது கிடைக்கவில்லை. கட்சத்தீவு பிரச்சினை குறித்து பிரதமர் முன்னிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியது தி.மு.கவினர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் முயற்சியாகவே உள்ளது.

    பொய்யாக நாடகம் ஆடுபவர்களை நம்பாமல் பிரதமர் மோடியை நம்பினால் நமது நாடு உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு முன்னேறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையேயான ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும்.
    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

    நாகர்கோவில்:

    ரெயில்வே மத்திய மந்திரி அஸ்வினி வைஸ்னவ்வுக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷண்ன் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக கொல்லம் வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது பொதுமக்களுக்கு கடும் அவதியை ஏற்படுத்தும். எனவே ரெயில்வே நிர்வாகம் குமரி மாவட்ட மக்களின் நலன் கருதி நாகர்கோவில் சத்திப்பு வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்.

    அதேசமயம் ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையேயான ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும். இத்தகைய ரெயில் சேவை மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×