search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் விபத்து"

    • வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் கட்டிட வேலைக்கு கார்த்திக் சென்றார். வேலை முடிந்து மாலை பைக்கில் வீடு திரும்பினார்.

    அப்போது ஆத்தூர்குப்பம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விரமாக பைக் மோதியது. இதில் கார்த்திக் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கிருந்து பொது மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்ட றம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் படுகாயம்

    ஜோலார்பேட்டை:

    சென்னை அருகே கேளம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மகன் தீபக் (வயது 21). இவர் ஏலகிரி மலையில் நடைபெறும் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது பைக்கில் சென்னை நோக்கி புறப்பட்டார் அப்போது ஏலகிரி மலை 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி வலது கால் முறிவு ஏற்பட்டது.

    உடனடியாக அங்கிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக தீபக் கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மயில்வாகனம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மகனுடன் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த பொன்னை அருகே உள்ள பரமசாத்து கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மனைவி ராதா (வயது 40).

    ராதா நேற்று மதியம் தனது மகனுடன் பைக்கில் பரமசாத்து கிராமத்தி லிருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்றனர்.

    குமணந்தாங்கல் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ராதாவின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ராதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த தச்சம்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் சுதாகரன், (வயது 47) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2மகன்கள், 1 மகள், உள்ளனர்.

    சுதாகரன், நேற்று இரவு சேத்துப்பட்டு, புறவழி சாலை வழியாக தச்சம்பாடி, நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது புறவழி சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாகரன், பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர், சிஎம்சி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுதாகரன், வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    வேலூர் முள்ளிப்பாளையம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளமதி மகன் கோகுல்நாத் (வயது 17).

    வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுதாகர் (18). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஆற்காடு அருகே கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்துள்ளனர்.

    பின்னர் வேலை முடிந்து மாலை 3 மணியளவில் ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் சாலை வழியாக வேலூர் நோக்கிச் சென்றனர். பைக்கை கோகுல்நாத் ஓட்டியுள்ளார். ஆற்காடு- கண்ணமங்கலம் சாலையில் திமிரி அடுத்த கரடிமலை வளைவில் சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதாகர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், முதன்மை காவலர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுதாகரை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோகுல்நாத்தின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதினார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 31), பூ மாலை கட்டும் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று ஆடையூரில் இருந்து இனாம்காரியந்தல்செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால்வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மகன் பிறந்தநாளுக்கு புத்தாடை எடுத்துக்கொண்டு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பாஞ்சரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 43) நெல் வியா பாரி. இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு துளசிராமன் (13), பிரசாந்த (11) என 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் துளசிராமனுக்கு வருகிற 30-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் புதியதாக புத்தாடை எடுப்பதற்காக ராஜாவும், ரேவதியும் நேற்று முன்தினம் இரவு வந்தவாசிக்கு சென்றனர்.

    பின்னர் புது ஆடைகளை வாங்கிக் கொண்டு பைக்கில் கணவன், மனைவி வீடு திரும்பினர்.

    வந்தவாசி திண்டிவனம் நெடுஞ்சாலை பொன்னூர் கூட் ரோடு அருகே வந்து கொண்டிருந்தனர். ஜப்திகாரணியில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற மணிக்கண் டன் (22) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், ராஜா ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜா. மணிக் கண்டன் இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச் சம்ப வம் தொடர்பாக ரேவதி பொன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன் பிறந்தநாளுக்கு துணி எடுத்து கொண் வீடு திரும்பும்போது விபத்தில் வியாபாரி இறந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் சந்திரன் மகன் அரி (வயது 20), வெங்கடேசன் மகன் விஷ்வா (21). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சோளிங்கரில் இருந்து வாலாஜா சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால்பண்ணை அருகில் சென்றபோது நிலை தடுமாறி புளியமரத்தில் மோதி னர். இதில் அரி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே - உயிரிழந்தார். விஷ்வா படுகாயம் அடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.
    • க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது43). தச்சு தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டி சென்றார். தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து பாலமுருகனின் தம்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பத்தாரிடம் விபத்து குறித்து கூறினார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது பாலமுருகன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    சோளிங்கர் தாலுகா, கீழ் கரடிகுப்பம் கிராமம் 1-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கிருஷ்ணகாந்த்(21) காண்டிராக் முறையில் செண்டிரிங் வேலை செய்து பார்த்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகாந்த் வாலாஜாவிலிருந்து ஆற்காடு நோக்கி செல்வதற்காக, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ண்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் கிருஷ்ணகாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்பு சுவரில் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பைனபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40) மர வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று பருகூர் பகுதியிலிருந்து தனது பைக்கில் ரவி பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் பைனப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வரும்போது பைக் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் அருங்கல் துருகத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 51). ராணுவ வீரர். இவரது மனைவி புனிதா (41). இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று மாலை வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் கணவன் மனைவி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை புனிதா பரிதாபமாக இறந்தார். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புனிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×