search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயர்ப்பலகை"

    • பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி இடம்பெற வலியுறுத்தி சிலநாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது.
    • பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவீத கன்னடம் இடம்பெற வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயம் என சட்ட மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

    கர்நாடகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவில் ஆங்கில பெயர்ப்பலகை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை கண்டித்தும், பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும் சிலநாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது. அப்போது சில வன்முறை சம்பவங்கள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து, பெங்களூர் மாநகராட்சி தலைநகரில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்திலும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவீத கன்னடம் இடம்பெறச் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    கர்நாடக அமைச்சரவையிலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பபட்டது. இதை முதலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற்று ஒப்புதலுடன் அனுப்புங்கள் எனக்கூறி ஜனவரி 30-ம் தேதி திருப்பி அனுப்பினார்.

    இதையடுத்து, தற்போது நடந்து வரும் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மசோதா முதன்முதலாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது .

    இந்நிலையில், இன்று சட்ட மேலவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநரும் இதற்கு ஒப்புதல் தர உள்ளார்.

    இதனால் கர்நாடகாவில் கடைகள், வணிக வளாகம் மற்றும் தொழில்நிறுவனங்கள் அனைத்திலும் 60 சதவீதம் கன்னட எழுத்துக்கள் கட்டாயம் என்ற சட்டம் விரைவில் அமல்படுத்தபட உள்ளது.

    • கீழக்கரை வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்குமாறு பா.ம.க. பிரசாரம் நடந்தது.
    • இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    கொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆணைக்கிணங்க கீழக்கரையில் நகரச்செயலாளர் லோகநாதன் தலைமையில் வணிக வளாகங்களில் அதன் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக்கோரி துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அக்கீம், தலைவர் சந்தனதாஸ் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட பசுமை தாயகத்தின் செயலாளர் கர்ண மகாராஜன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் செரிப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரத்தை பா.ம.க.வினர் வழங்கினர்.
    • இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அக்கீம் கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் நகரம் முழுவதும் நகர செயலாளர் பாலா தலைமையில் வணிக வளாகங்களில் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக் கோரி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் ெசய்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் கலந்து கொண்டார்.

    மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் ஷெரீப், அமைப்பாளர் கபில் தேவ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராகிம், தலைவர் இமானுவேல், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×