search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் நகை திருட்டு"

    • அவரது கணவரின் நண்பர் என கூறிக்கொண்டு 4 வாலிபர்கள் உள்ளே புகுந்தனர்.
    • திடீரென கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த நகையை கேட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே ஆவாரம் பட்டியை சேர்ந்தவர் ரவி மனைவி ராணி (வயது46). இவர் தனது வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அவரது கணவரின் நண்பர் என கூறிக்கொண்டு 4 வாலிபர்கள் உள்ளே புகுந்தனர். திடீரென கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த நகையை கேட்டனர். அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த கும்பல் ராணியை சரமாரியாக கத்தியால் குத்தி கழுத்தில் இருந்த 9½ பவுன் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி ராணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து விளாம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடைக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.
    • இது குறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள கருத்தமடைப்பட்டி மெயின்ரோட்டைச் சேர்ந்த தெய்வேந்திரன் மனைவி கண்ணகி (வயது 55). இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு அருேக உள்ள பலசரக்கு கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த கடைக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கண்ணகியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.

    இது குறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • எஸ்தர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாத்தூருக்கு ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.
    • ஏர்போர்ட் பஸ் நிறுத்தத்துக்கும் மாத்தூர் ரவுண்டானாவுக்கும் இடையே பஸ் சென்று கொண்டிருந்தபோது அவரது கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சி

    திருச்சி மாத்தூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பி. இவரது மனைவி எஸ்தர்(வயது 33).

    இவர் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். பின்னர் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாத்தூருக்கு ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.

    முன்னதாக பாதுகாப்பு கருதி திருமண வீட்டில் அவர் அணிந்த ரெண்டே கால் பவுன் நெக்லஸை கழட்டி ஒரு பாக்ஸில் வைத்து தனது கைப்பையில் போட்டு வைத்திருந்தார்.

    இந்த நிலையில் பஸ் ஏர்போர்ட் பஸ் நிறுத்தத்துக்கும் மாத்தூர் ரவுண்டானாவுக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது அவரது கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் எஸ்தர் கைப்பைக்குள் போட்டு வைத்திருந்த ரெண்டே கால் பவுன் நெக்லஸை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து எஸ்தர் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×