நிலக்கோட்டை அருகே வீடு புகுந்து கத்தியால் குத்தி பெண்ணிடம் நகை திருட்டு

அவரது கணவரின் நண்பர் என கூறிக்கொண்டு 4 வாலிபர்கள் உள்ளே புகுந்தனர். திடீரென கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த நகையை கேட்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே ஆவாரம் பட்டியை சேர்ந்தவர் ரவி மனைவி ராணி (வயது46). இவர் தனது வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது கணவரின் நண்பர் என கூறிக்கொண்டு 4 வாலிபர்கள் உள்ளே புகுந்தனர். திடீரென கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த நகையை கேட்டனர். அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த கும்பல் ராணியை சரமாரியாக கத்தியால் குத்தி கழுத்தில் இருந்த 9½ பவுன் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி ராணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து விளாம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com