search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் மறியல்"

    • 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர்.
    • காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இன்றுகாலை கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மிட்டப்பள்ளி பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் கிருஷ்ணகிரி நோக்கி செல்லக்கூடிய பேருந்து களும், திருவண்ணாமலை நோக்கி செல்லக்கூடிய பேருந்துகளும் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதிக்கு குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க கோரி அங்கு வசித்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சூரிய நாராயணன் தெருவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துறைமுகத்துக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் 520 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் இருந்தது. அவை மிகவும் பழுதடைந்து சிதிலமடைந்து இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவை முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 3 ஆண்டுகளாகியும் இன்னும் வீடுகள் கட்டும் பணி முழுவதும் முடியவில்லை. தற்போது 70 சதவீத பணிகள் முடிந்து உள்ளன.

    இந்த நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க கோரி அங்கு வசித்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சூரிய நாராயணன் தெருவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துறைமுகத்துக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.எபினேசர், ராயபுரம் உதவி கமிஷனர் லட்சுமணன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி விரைவில் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் இடிக்கப்படும் போது 18 மாதத்தில் கட்டி முடித்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்றனர்.

    • ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்க அதிகாரிகள் வந்தனர்.
    • துர்கா நகர் மெயின்ரோட்டில் அதிகாரிகளை பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை, இந்திரா நகரில் உள்ள பெரியார் தெரு, தண்டு மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வீரராகவ பெருமாள் கோவில் ஏரியை சுற்றி சுமார் 314 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, அதனை அகற்ற தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்க அதிகாரிகள் வந்தனர்.

    அப்போது துர்கா நகர் மெயின்ரோட்டில் அதிகாரிகளை பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    • மது பாட்டில்களுடன் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    • போலீசாரும் இதனை கண்டு கொள்ளாமல் புகார் தெரிவித்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த ஏ. ரெட்டிப்பாளையம் கிராமத்தில் சிலர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    மேலும் புகார் தெரிவித்தவர்களுக்கு மது பாட்டில் பதுக்கி விற்பவர்கள் மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் போலீசாரும் இதனை கண்டு கொள்ளாமல் புகார் தெரிவித்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காட்டூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

    இதற்கிடையே இன்று காலை மது பாட்டில்களுடன் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×