search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீருக்காக  பெண்கள் மறியல்
    X

    மிட்டப்பள்ளி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    குடிநீருக்காக பெண்கள் மறியல்

    • 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர்.
    • காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இன்றுகாலை கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மிட்டப்பள்ளி பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் கிருஷ்ணகிரி நோக்கி செல்லக்கூடிய பேருந்து களும், திருவண்ணாமலை நோக்கி செல்லக்கூடிய பேருந்துகளும் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதிக்கு குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×