search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிசை மாற்றுவாரிய வீடுகளை விரைந்து கட்டி முடிக்கக்கோரி பெண்கள் மறியல்
    X

    குடிசை மாற்றுவாரிய வீடுகளை விரைந்து கட்டி முடிக்கக்கோரி பெண்கள் மறியல்

    • குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க கோரி அங்கு வசித்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சூரிய நாராயணன் தெருவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துறைமுகத்துக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் 520 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் இருந்தது. அவை மிகவும் பழுதடைந்து சிதிலமடைந்து இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவை முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 3 ஆண்டுகளாகியும் இன்னும் வீடுகள் கட்டும் பணி முழுவதும் முடியவில்லை. தற்போது 70 சதவீத பணிகள் முடிந்து உள்ளன.

    இந்த நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க கோரி அங்கு வசித்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சூரிய நாராயணன் தெருவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துறைமுகத்துக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.எபினேசர், ராயபுரம் உதவி கமிஷனர் லட்சுமணன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி விரைவில் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் இடிக்கப்படும் போது 18 மாதத்தில் கட்டி முடித்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×