search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் கைது"

    • தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.
    • பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜோத்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கவி. இவர் அங்குள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டைப்பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    அப்போது அங்கு 4 பெண்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வெளியே நின்று கொண்டு நோட்டமிட மற்ற 2 பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

    இந்தநிலையில் அங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.

    அப்போது பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார். இதையடுத்து அந்த விவசாயியிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் சிக்கிய 2 பெண்களும் தங்களது ஆடைகளை களைந்து அரை நிர்வாண கோலத்தில் நின்றனர். மேலும் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது வீட்டின் உரிமையாளரான சங்கவி அங்கே வந்துள்ளார். இதையடுத்து 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பார்வதி (வயது 32), சித்ரா( 30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 2 பேரும் ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடுவதும், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களுடன் வந்த பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • சிவகங்கை அருகே 150 கிலோ மின் கம்பிகள் திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ அலுமினிய கம்பிகளை 3 பெண்கள் திருடிக்கொண்டு சென்றனர். இதை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் அவர்களை பிடித்து திருப்பத்தூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி கீரைக்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அய்யம்மாள் (37), ஜெயராஜ் மனைவி குருவம்மாள் (55), வீராச்சாமி மனைவி கலா (55) என தெரியவந்தது.

    மின் கம்பிகள் திருட்டு தொடர்பாக மின்பாதை ஆய்வாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின்பேரில் 3 பெண்களையும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.

    • கடை ஊழியர்களை மிரட்டும் வகையில், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு கேட்கும் நகையை தர வேண்டும் என கூறி உள்ளனர்.
    • சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அமர வைத்து குளிர்பானங்கள் கொடுத்தனர். பின்னர் மத்தியபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள பாளை ரோட்டில் ஒரு பிரபல ஜவுளிக்கடையுடன் இணைந்த நகைக்கடை இயங்கி வருகிறது.

    இந்தக் கடையின் நகைக்கடை பிரிவுக்கு நேற்று மாலை டிப்-டாப்பாக உடை அணிந்து 2 பெண்கள் வந்தனர். கடையில் உள்ள நகைகளை பார்த்த அவர்கள் சுமார் 10 பவுன் நகை தேர்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் உங்களது கடை முதலாளி எங்கே இருக்கிறார்? அவரை வரச்சொல்லுங்கள் என்று கேட்டனர்.

    அதற்கு ஊழியர்கள் என்ன காரணம்? எங்களிடம் சொல்லுங்கள்? என்று கேட்டும் பதில் அளிக்கவில்லை. உடனடியாக அருகில் இருந்த கடையின் மேலாளர் என்ன விவரம் என்று எங்களிடம் சொல்லுங்கள் என்று கேட்டார்.

    உடனே அந்த 2 பெண்களும், நாங்கள் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறி தங்களிடமிருந்த அடையாள அட்டையை காண்பித்தனர்.

    மேலும் கடை ஊழியர்களை மிரட்டும் வகையில், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு கேட்கும் நகையை தர வேண்டும் என கூறி உள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அமர வைத்து குளிர்பானங்கள் கொடுத்தனர். பின்னர் மத்தியபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சாலைத்தெருவை சேர்ந்த ராஜலட்சுமி (வயது40), சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெரியகடை கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி (36) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. ராஜலட்சுமி ராமநாதபுரத்தில் மருத்துவமனை நடத்தி டாக்டர் என போலியாக தவறான சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருவதும் தெரியவந்தது.

    தொடர்ந்து இந்தப் பெண்கள் தமிழகம் முழுவதும் வேறு நகைக்கடையில் கைவரிசை காட்டி உள்ளார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எருமப்பட்டி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பக்கத்து வீட்டு பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    எருமப்பட்டி, 

    எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி கங்கானித் தெருவில் வசித்து வந்தவர் சண்முகம். இறந்து விட்டார். இவருடைய மனைவி அமராவதி(வயது 70). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அமராவதி தனது 2-வது மகன் ஞானபிரகாசம் மற்றும் மகள் ராஜேஸ்வரி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 9-ந்தேதி காலை மகனும், மகளும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் அமராவதி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அமராவதி அணிந்திருந்த 4பவுன் செயின், காதில் கிடந்த ¾பவுன் தோடு, பீரோவில் இருந்த 10பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அமராவதி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஜோதி(31) என்ற பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜோதி, அதேபகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் தேவிகா(34), மலையாளி மனைவி பூங்கோதை(35) ஆகியோர் சேர்ந்து நகைக்காக மூதாட்டி அமராவதியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், நகைகளை திருடியதும் தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 14பவுன் நகைகளும் மீட்கப்பட்டது.
    ×