search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உடல்நலம்"

    • இன்றைய பெண் எல்லா துறைகளிலும் சிறந்து நிற்கிறாள்.
    • கர்ப்பிணி பெண்கள், யோகா பயிற்சி செய்யலாம்.

    பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் 'பெண்'..!''ஆண்களை விட, பெண்கள்தான் அதிக அளவில் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். குடும்பம், வேலை என எப்பொழுதும் பிசியாகவே ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள், பல நேரங்களில் தங்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. இதனால் மன நோய் மற்றும் உடல் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், பெண்கள் தங்கள் வயது மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அன்றாட யோகா பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உடல் வலிமையையும், மன அமைதியையும் அடைய முடியும்.

    அடுத்த தலைமுறையை ஈன்று வளர்க்கப் போகும் பெண், தன் உடலையும், மனதையும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். பெண்ணின் ஆரோக்கியத்தைப் பொறுத்து, அவளுடைய குடும்பமும், அடுத்த தலைமுறையும் அமையும். இது மட்டும் அல்லாமல், இன்றைய பெண் எல்லா துறைகளிலும் சிறந்து நிற்கிறாள். தன்னுடைய லட்சியங்களை அடைய, முன்னுக்கு வர, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது, மிகவும் முக்கியம். இதற்கு பெண்கள் யோகாசனங்கள் செய்வது அவசியம்.

    பருவமடையும் பெண்கள், திருமண வயது பெண்கள், திருமணம் முடிந்த பெண்கள், நடுத்தர வயதினர், முதுமையடைந்த பெண்கள்... என இவர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சிகள் கட்டாயமாகின்றன. பருவமடையும் பெண்களின் மனதில் பலவிதமான குழப்பங்களும், உடல் உறுப்பு சம்பந்தமான சந்தேகங்களும் எழுந்து கொண்டே இருக்கும். அப்படி குழம்பிஇருக்கும் அவர்களது மனதைநிதானப்படுத்த, யோகாசனம் அவசியமாகிறது. மனம் தெளிவானால் அவர்களது ஹார்மோன்களும் சீராக இருக்கும். அதனால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.

    ஹார்மோன் சமநிலையும், சீரான ரத்த ஓட்டமும் கருப்பையின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதால், திருமண வயதை நெருங்கும் பெண்களுக்கும், யோகாசனம் கட்டாயமாகிறது. ஏனெனில் யோகாசன பயிற்சிகள், இவ்விரண்டையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

    திருமணம் முடிந்து குழந்தை பெற்றவர்கள், கர்ப்ப காலத்திற்கு பிறகான மன அழுத்தத்தை குறைக்கவும், குடும்ப உறவுகளின் உணர்வு நெருக்கடிகளை சமாளிக்கவும் யோகாசனம் பயன்படுகிறது.

    வீட்டுவேலை, சமையல் வேலை என பிசியாக இயங்கும் நடுத்தர வயது குடும்ப தலைவிகளுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எலும்புகளை வலுவூட்டி முதுகுவலி மற்றும் மூட்டு வலிகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

    வயதான பெண்கள், தனிமை உணர்வை போக்கவும், தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் யோகாசனம் வழிகாட்டுகிறது.

    இப்போதெல்லாம் பல இளம் பெண்களுக்கு உடல் சம்பந்தமான நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. ஒழுங்கற்ற ஹார்மோன், கர்ப்பப்பை கோளாறுகள், மன அழுத்தம், பி.சி.ஓ.எஸ்., பி.சி.ஓ.டி., உடல் பருமன்... இப்படி நிறைய பிரச்சினைகளால் துவண்டுவிடுகிறார்கள். எளிமையான யோகாசனம் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்ம். மேலும், மருந்து மாத்திரைகள் மூலமாக உடலை வருத்திக்கொள்வதை விட, யோகாசனம் ஆரோக்கியமான தீர்வாக அமைந்துவிடும்.

    கர்ப்பிணி பெண்கள், யோகா பயிற்சி செய்யலாம். இது, சுக பிரசவம் ஆவதற்கு உதவும். முதல் மூன்று மாதங்கள், பயிற்சி எதுவும் தேவை இல்லை; செய்ய வேண்டாம். நான்கு மாதங்களுக்கு பின், அவரவர் உடல் தன்மைக்குத் தகுந்தாற்போல் பயிற்சி செய்யலாம். மிகவும் எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். கடைசி மூன்று மாதங்களில், மூச்சுப் பயிற்சிகளுடன் கருவில் இருக்கும் சிசுவுடன் பேசும் தியானமும் சொல்லிக்கொடுப்பது வழக்கம். இது, குழந்தைகளுடனான பிணைப்பையும் அதிகப்படுத்தும். அதேசமயம் கர்ப்பிணிகள் பயம் இல்லாமல், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். பிரசவ நேரத்தில் மூச்சு பயிற்சி மிகவும் உதவும். இது எல்லாவற்றையுமே, ஒரு யோகா சிகிச்சையாளர் மூலம் கற்று, செய்வது தான் நல்லது

    மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கும் பல பெண்களுக்கு, உடல் மன ரீதியான உபாதைகள் நிறைய இருக்கின்றன. அதிகமான ரத்தப்போக்கு, கை-கால் வலி மட்டும் அல்லாமல் சில பெண்களுக்கு மன அழுத்தம், சட்டென கோபம் கொள்ளுதல் அல்லது மனச்சோர்வு ஆகியவை கூட காணப்படுகின்றன. யோகா பயிற்சி மூலம், உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல; மன அமைதியையும் அடையலாம். இதனால் பல பெண்கள் நன்மை அடைந்திருக்கின்றனர்.

    வயதான பெண்களுக்கு மிகவும் எளிமையான ஆசனங்களைத் தான் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குப் பிராணாயாமமும், தியானமும் சேர்த்து பயிற்றுவிக்கலாம். பெண்கள், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த நோய், மூட்டு வலி, ஆர்த்தரைட்டிஸ் போன்ற பல உபாதைகளை எதிர்கொள்வதை பார்க்கிறோம். இதுபோல் பல உபாதைகளை யோகா பயிற்சியினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். தினமும் பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். பல பெண்கள், 'எனக்கு தினமும் இவ்வளவு நேரம் ஒதுக்குவது கஷ்டம்' என்று நினைப்பது உண்டு. இதுபோல் நினைக்காமல், 'இது என் நேரம். என் ஆரோக்கியத்திற்கான முதலீடு யோகா பயிற்சி' என்ற உணர்வுடன், தன்னம்பிக்கையுடன் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும்.

    • 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.
    • வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்ட கோளாறுகளால் மாதவிடாய் சுழற்சி தாமதாமாகும்.

    பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். ஒரு சில நாட்கள் முன் அல்லது பின், அதாவது 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது இயல்பானதாகும். அவ்வாறில்லாமல், கீழ்க்கண்ட வகைகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டால் அது சீரற்ற மாதவிடாயாகக் கருதப்படும்.

    சீரற்ற மாதவிடாய்க்கான அறிகுறிகள்

    மாதவிடாய் ஏற்படும் காலம் ஒரே சீராக இல்லாமல் ஒவ்வொரு முறையும் நீண்ட நாள்கணக்கு வித்தியாசத்தில் முன்பாகவோ பின்பாகவோ ஏற்படுதல்.

    21 நாட்களுக்கு முன்பாகவோ 35 நாட்களுக்குப் பின்னரோ மாதவிடாய் ஏற்படுதல். மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு மாதவிடாய் உண்டாகாமல் இருத்தல். வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமான அல்லது மிகக் குறைவான உதிரப்போக்கு ஏற்படுதல்

    சீரற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்களில் சில:

    ஹார்மோன் கோளாறுகள்

    தைராய்டு இயக்கம் சீராக இல்லாமை

    சினைப்பை நோய்க்குறி (PCOS)

    கர்ப்பப்பை கோளாறுகள்

    அதீத உடற்பயிற்சி

    சத்தான ஆகாரம் உண்ணாமை

    அதிக அல்லது குறைவான உடல் எடை

    மன அழுத்தம்

    மாதவிலக்கு நிற்கும் காலம் (menopause)

    சில வகையான மருந்துகள்

    சில உடல் நலக் கோளாறுகள்

    நாற்பது வயதுக்கு மேல், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரம், சீரற்ற முறையில் தான் மாதவிடாய் ஏற்படும். பர்த் கண்ட்ரோல் பில்ஸ் என்று கூறப்படும் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் மருந்துகள் பயன்படுத்தினாலும், IUD என்ற கருத்தடைகள் சாதனங்களைப் பயன்படுத்தினாலும், மாதவிடாய் சுழற்சி முறையற்று காணப்படும்.

    பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் (PCOS), ஃபைப்ராய்ட்ஸ், பெல்விக் பாதிப்பு, என்டோமெட்ரியோசிஸ் உள்ளிட்ட சினைப்பை பிரச்சனைகள் மாதா மாதம் கருமுட்டை உருவாவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

    அதிகப்படியான ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை அதிகரிப்பு ஆகிய வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்ட கோளாறுகளால் மாதவிடாய் சுழற்சி தாமதாமாகும்.

    • பைப்ராய்டு கட்டிகள், பெண்ணின் 30 முதல் 50 வயதிற்குள் வருகிறது.
    • கர்ப்பகாலத்தில் பல வித சிக்கல்கள் ஏற்படலாம்.

    ''இளம் பெண்களுக்கு, 'பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' எனப்படும் நீர்க்கட்டிகளும், 35 வயதிற்கு மேல், 'பைப்ராய்டு' எனப்படும் சதைக் கட்டிகள் வருவதும், பல ஆண்டுகளாக பெண்கள் மத்தியில் பொதுவான பிரச்னையாக உள்ளது'' என்கிறார் மகப்பேறு மருத்துவர். பைப்ராய்டு கட்டிகள் ஏற்பட காரணம் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

    பைப்ராய்டு கட்டிகள், பெண்ணின் 30 முதல் 50 வயதிற்குள் வருகிறது. கட்டி என்றதும், அது கேன்சராக இருக்க கூடும் என்ற பயம் எல்லாருக்கும் ஏற்படும். ஆனால் பைப்ராய்டு கட்டிகள் பெரும்பாலும் கேன்சர் கட்டி கிடையாது. இது, கேன்சராக மாறுவதற்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்பதால் அது குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. முறையான சிகிச்சை முறையே உங்களுக்கு கைக்கொடுக்கும்.

    பைப்ராய்டு கட்டி வருவதற்கு, மரபியல் காரணி தான் பொதுவாக கருதப்படுகிறது. இது தவிர, 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' அதிகம் சுரப்பதாலும் இந்த கட்டி வரலாம். நீர்க் கட்டி அதிகம் இருந்தாலும், குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பவர்கள், ஹார்மோன் சிகிச்சை எடுப்பதாலும் இக்கட்டிகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இன்றைய காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே பருவமடைந்து விடுகிறார்கள். இவர்களின் மாதவிடாய் சுழற்சி 10 வயதில் இருந்தே ஆரம்பிக்க துவங்கிவிடுகிறது.

    அவ்வாறு ஆரம்பிக்கும் நிலையில் அந்த பெண் குழந்தைகளுக்கு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் பைப்ராய்டு கட்டிகள் தோன்றும் வாய்ப்பும் அதிகம். இந்த கட்டிகள் உடலில் உருவானதற்காக எந்த அறிகுறியோ வயிற்றில் வலியோ இருக்காது.

    நம் உடலுக்கும் மாற்றம் ஏற்பட்டு அதனால் எந்த அறிகுறி இல்லை என்றால், நாமும் அதை பெரியதாக கண்டு கொள்ள மாட்டோம். சில சமயம் வேறு ஏதாவது காரணத்திற்காக 'ஸ்கேன்' செய்து பார்க்கும் போது தான், இக்கட்டி இருப்பது தெரிய வரும். ஒரு சிலருக்கு மட்டும் மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படும். ரத்தப்போக்கும் அதிகமாகவும் அதே சமயம் அதிக நாட்களும் இருக்கும். இவர்கள் ரத்தசோகைபிரச்னையால் அவதிப்படுவார்கள்.

    பைப்ராய்டு கட்டிகள் மூன்று இடங்களில் உருவாகும் வாய்ப்புள்ளது. ஒன்று, கர்ப்பப் பையின் வெளிப்புறம் வரலாம். கர்ப்பப் பைக்கும், வெளிப்புற அடுக்குக்கும் நடுவில் வரலாம். கர்ப்பப் பையின் உள்ளேயும் வரலாம். எங்கே இருக்கிறது, பிரச்னை என்ன, பெண்ணுடைய வயது இந்த மூன்றையும் பொறுத்து தான் சிகிச்சையும் மாறுபடும். அவரவர் பிரச்னைக்கு ஏற்ப தான் சிகிச்சை அளிக்க முடியும்.

    மாதவிடாய் நின்ற பெண்ணுக்கு பைப்ராய்டு இருப்பது தெரிந்தால், கவலைப்பட அவசியம் இல்லை. அது கண்டிப்பாக கேன்சர் கட்டியாக மாறாது. இந்த சமயத்தில் இயல்பாகவே ஹார்மோன் அளவு குறைவதால், ரத்த ஓட்டம் குறைந்து, கட்டி சுருங்கி விடும். குழந்தை பெறும் வயதில், கர்ப்பப் பையின் உள்ளே கட்டி இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் அபாயமும், குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், கட்டியை அவசியமாக அகற்ற வேண்டும்.

    கர்ப்பப் பையின் வெளிப்புறத்தில் இருந்தால், கர்ப்பம் தரிப்பதை பாதிக்காது. கர்ப்பப்பை வாயில் கட்டி இருந்தால், விந்தணு உள்ளே செல்வதை பாதிக்கும். கருக்குழாய் அருகில் இருந்தால், கரு முட்டையும், விந்தணுவும் இணைவதை பாதிக்கும். அதுவே கருப்பை உள்ளே இருந்தால், கரு தங்குவதை பாதிக்கும், கரு வளர்வதையும் தடுக்கும். இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், கட்டியும் பெரிதாக வளரும்.

    இதனால் கர்ப்பகாலத்தில் பல வித சிக்கல்கள் ஏற்படலாம். கட்டியின் தன்மையைப் பொறுத்தே சிகிச்சையை தீர்மானிக்க வேண்டும். தற்போது எளிமையான, பல நவீன சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளதால், அவற்றை பயன்படுத்தலாம். சிலருக்கு கட்டியின் அளவு 5 செ.மீ.,க்கு மேல் பெரிதாக இருக்கும்.

    அவர்களுக்கு வேறு வழியே இல்லாத பட்சத்தில், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக அமையும். மாதவிடாய் போது சிறிய வலி ஏற்பட்டாலும் தள்ளிப்போடாமல் உடனடியாக மகப்பேறு நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் மனதில் பதிய வைத்துக் கொள்வது அவசியம்.

    • நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    கர்ப்பகாலத்தின் ஹார்மோன்கள், இன்சுலின் செயல்பாட்டை எதிர்த்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை, கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள். இது பொதுவாக கர்ப்பத்தின் 24 முதல் 28-வது வாரங்களுக்கு இடையில் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    *கார்போஹைட்ரேட் மிக அதிகமாக உள்ள உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை, தினை, சோளம் போன்ற தானிய வகைகளை உட்கொள்ள வேண்டும்.

    *நன்கு வேக வைத்த பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    *பால், மீன், முட்டையின் வெள்ளை, போன்ற புரதங்கள் மற்றும் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவாக உள்ள கொய்யா, மாதுளம், சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.

    *நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும் சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு போன்ற பாலூட்டிகளின் இறைச்சி), பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    *தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    *ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

    *மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றையும் செய்யலாம்.

    *துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    நீரிழிவு நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பனிக்குடநீர் அதிகமாக இருப்பதால் கருக்கலைப்பு ஏற்படும் அபாயம், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இல்லாதபோது அதிகரிக்கிறது.

    • சில தனித்துவமான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன.
    • பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம்.

    நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம். பெண்களில் நீரிழிவு அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம். எல்லா நோய்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொடுப்பதில்லை. நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இந்த நோய் பெண்கள் மற்றும் ஆண்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. அதனால்தான், இந்த நோயின் பொதுவான அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம்.

    பெண்களில் நீரிழிவு அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தால், ஆண்களைப் போலவே அதே அறிகுறிகளையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். இருப்பினும், சில தனித்துவமான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன. இரண்டையும் புரிந்துகொள்வது நீரிழிவு நோயைக் கண்டறிந்து ஆரம்ப சிகிச்சையை எடுக்க உதவும்.

    தனித்துவமான பெண்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:

    * யோனி மற்றும் வாயில் பூஞ்சை தொற்று மற்றும் யோனி மீது ஒரு சொறி

    * சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்

    * பாலியல் செயலிழப்பு

    * பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பெண்களுக்கு நீரிழிவு அறிகுறிகள் ஆண்களால் கூட அனுபவிக்கப்படலாம்:

    * பெரும்பாலும் தாகமும் பசியும் இருக்கும்

    * அடிக்கடி சிறுநீர் கழித்தல்

    * எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் எடை அதிகரிப்பு வியத்தகு அளவில் உயர்கிறது

    * சுறுசுறுப்பான, சோர்வான மற்றும் மந்தமானதாக தோன்றுகிறது

    * மங்கலான பார்வை

    * காயம் மெதுவாக குணமடைகிறது

    * குமட்டல்

    * தோல் தொற்று

    * மடிப்புகளைக் கொண்ட உடல் பாகங்களில் கருப்பு புள்ளிகள்

    * இனிப்பு மூச்சு அல்லது அசிட்டோன்

    * கால்களிலும் கைகளிலும் சுவைக்க குறைந்த உணர்திறன்

    டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலான அறிகுறிகள் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். உங்கள் நீரிழிவு நோயை சரியாகக் கட்டுப்படுத்த வழக்கமான இரத்த சர்க்கரை சோதனை சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும்.

    நீங்கள் வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தில் இருந்தால்:

    * 45 வயதுக்கு மேற்பட்ட வயது

    * அதிக எடை அல்லது பருமனான

    * நீரிழிவு நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டிருங்கள்

    * 4 கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுங்கள்

    * கர்ப்பகால நீரிழிவு நோய்

    * உயர் இரத்த அழுத்தம் வேண்டும்

    * அதிக கொழுப்பு உள்ளது

    * வாரத்திற்கு மூன்று முறைக்கு குறைவாக உடற்பயிற்சி செய்யுங்கள்

    * பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற இன்சுலின் பயன்பாடு தொடர்பான பிற சுகாதார நிலைமைகளைக் கொண்டிருங்கள்

    * இதய நோய் அல்லது பக்கவாதம் வரலாறு இயற்கையாகவே, ஒரு பெண்ணின் உடல் நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் அதிக சவால்களை உருவாக்குகிறது.

    * மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இது பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.

    * பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.

    * உடலில் உள்ள குளுக்கோஸ் பூஞ்சை தொற்று ஏற்படுத்தும்.

    • மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
    • தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    கருவுற்றிருக்கும் பெண், அதிலும் குறிப்பாக முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு கர்ப்பம் குறித்து மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். இது பலவிதமான உணர்ச்சிகளையும், கவலைகளையும் கொண்டு வரலாம். ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பற்றி கவலைப்படுவது ஒரு மோசமான விஷயம் அல்ல, ஏனெனில் இது புதிய சவால்களை எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்க மக்களைத் தள்ளும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்..

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மனரீதியானவை. இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எதிர்பார்ப்புள்ள தாய்மார்களையும் மன அழுத்தம் கடுமையாக பாதிக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால், தாய் மற்றும் குழந்தை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அடிப்படையில் இது உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக பலவீனப்படுத்துகிறது. இருப்பினும், மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, சுமூகமான மற்றும் ஆபத்து இல்லாத கர்ப்பத்திற்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    சீரான முறையில் சுவாசிக்க:

    சுவாச முறைகள் மன அழுத்தத்தால் கணிசமாக பாதிக்கப்படுகின்றன. இதன் பொருள் நீங்கள் குறைவாக சுவாசிக்கிறீர்கள். இது உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும். கர்ப்ப காலத்தில் சரியாக சுவாசிக்கவும் மற்றும் உட்கார்ந்து அல்லது படுத்து, கண்களை மூடி சுவாசிக்க வேண்டும். நீங்கள் கவலையாக உணரும் போதெல்லாம் குறைந்தது ஐந்து ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நிம்மதியான நித்திரை:

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தம் காரணமாக தூங்குவதில் சிரமம் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் மனச்சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகம். உங்களுக்கு போதுமான தூக்கம் வராவிட்டால், உங்கள் உடலும் மனமும் விரைவாக ஆற்றலை இழக்கின்றன. குறிப்பாக அழுத்தத்தில் இருக்கும்போது. ஏனெனில் அது எதிர்மறையான எண்ணங்களுக்கும் வழிவகுக்கிறது. உங்களுக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், பகலில் சிறிது நேரம் தூங்க முயற்சிக்கவும்.

    உடற்பயிற்சி:

    மன அழுத்தத்தின் போது வெளியாகும் ஹார்மோன்கள் உங்கள் தசைகளை பதற்றம் மற்றும் சுருங்கச் செய்யும். கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனையை சமாளிக்க, உடலில் உள்ள பதற்றத்தை குறைக்க, இது ஒரு சிறந்த நுட்பமாகும். நீங்கள் பதற்றமாகவோ அல்லது பதட்டமாகவோ உணர்ந்தால், உங்கள் கழுத்து, முதுகு, கைகள் மற்றும் கால்களை நீட்டி சில நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் இடது காது உங்கள் இடது தோள்பட்டைக்கு அருகில் இருக்கும்படி உங்கள் தலையைத் திருப்புங்கள். மேலும் உங்கள் கழுத்தை நீட்டவும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருங்கள்.

    மிளகுக்கீரை சாப்பிடவும்:

    புதினா இலைகளில் மெந்தோல் என்ற பொருள் உள்ளது. இது தசை பதற்றத்தை குறைக்கிறது. இதை குடித்தால் அழுத்தம் குறையும். புதினா வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை நீக்குகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் மன அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சனைகளை குறைக்க மிளகுக்கீரை மிகவும் உதவியாக இருக்கும்.

    • மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
    • மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

    மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

    நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், மற்ற நேரங்களை விட சற்று அதிகமான அளவில் இரத்தம் வெளிவரும். அதிலும் அதுவரை அளவாக இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தாலும், உடலுறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும். ஏனெனில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது கருப்பையக மாசுக்கள் வேகமாக வெளியேத் தள்ளப்பட்டு, இரத்தக்கசிவு ஏற்படும் நாட்கள் குறையும்.

    ஆய்வு ஒன்றில் 30 சதவீதத்தினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகளவு பாலுணர்ச்சி இருப்பதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

    மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக நிறைய பெண்கள் கூறுகின்றனர்.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் இரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.

    அந்த 3 நாள்களில் உடலுறவு கொண்டால் கரு தங்காது. ஆகவே இந்த நாள்களில் கருத்தடை சாதனம் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த நாள்களில் உடலுறவு கொண்டு உச்சம் அடைந்தால் பெண்களுக்கு நல்ல ஹார்மோன் கிடைக்கும். இது சில பெண்களுக்கு தெரியும். பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நாள்களில் உடலுறவு மட்டுமின்றி சுய இன்பமும் பெறலாம். இது உடலுக்கு நல்லது. மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

    கால்வலி, உடம்பு வலி பறந்து போய்விடும். பெண்களும் மாதவிலக்கு வலிகளை கடந்து செல்ல முடியும். ஆகவே மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொண்டால், மன அழுத்தம், உடல் பிரச்னை உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரமுடியும்.

    எனினும், "மாதவிலக்கு காலங்களில் ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள் உள்ளவர்கள் இந்த உடலுறவை தவிர்க்க வேண்டும்.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உடலுறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
    • இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும்.

    இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin B) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.

    உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை 'இரத்த சோகை நோய்' என்கிறார்கள்.

    கர்ப்பக்காலத்தில் ஆரோக்கியமாக இருந்தால் தான் குழந்தையும் பிரசவ நேரத்தில் தாயும் நலமாக இருக்கமுடியும். கர்ப்பக்காலம் முழுவதுமே சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு நேரலாம். ஆனால் குறையவே கூடாது என்று சொல்லகூடிய சத்து என்றால் அது இரும்புச்சத்து தான். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சத்து குறைபாடு கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.

    கர்ப்பகாலத்தில் அவசியமான சத்துகளில் முதன்மையானதும் முக்கியமானதும் இரும்புச்சத்து தான். கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இதனால் பிரசவக்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும்.

    கர்ப்பக்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க அதிகப்படியாக உடல் உறுப்புகள் வேலை செய்கின்றன. அதனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அளவு இரும்புச்சத்து தேவையாக இருக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் மற்றும் மாத்திரைகள் வழியாக இவை பூர்த்தியடயாத போது கர்ப்பிணிகள் இரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.

    இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெள்ளை அணுக்களின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. மேலும் வைட்டமின் பி, ஃபோலிக் ஆசிட் சத்தும் குறையும் போது இரத்த சோகை மேலும் தீவிரமாகிறது. இதை அலட்சியப்படுத்தும் பெண்கள் கர்ப்பக்காலம் முழுவதுமே இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் சமயத்தில் அது குழந்தையின் உயிரையோ அல்லது தாயின் உயிரையோ பறித்துவிடும் வாய்ப்பும் உண்டு என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

    பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.

    மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

    இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

    இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

    • உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது.
    • தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும்.

    குழந்தையின்மையை போக்குவதற்கான மற்றொரு மருத்துவ தொழில்நுட்பங்கள் தான் வாடகைத்தாய். அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறை ஆகும். உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது.

    இதில் மரபியல் தாய், கருசுமக்கும் தாய் என்று 2 முறை உள்ளது. வாடகைத்தாயின் கருமுட்டையே கருவுருவாக்கத்தில் உதவி இருந்தால் அவரே குழந்தையின் மரபியல் தாய் ஆவார். ஒரு பெண்ணின் கருமுட்டையானது, ஒரு ஆணிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருவூட்டப்பட்டு, வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கும் முறை கருசுமக்கும் தாய் எனப்படுகிறது.

    வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதில் முறைகேடு நடை பெறாமல் இருக்க வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம்- 2021 கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைக்கு வந்தது.

    அதில் தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். குழந்தை பெற இயலாததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும். அவர் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் உள்ளன.

    தன்பாலின ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களுக்கே ஏற்றதாக இருப்பதாக மருத்துவ துறையினர் கூறுகிறார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை.
    • தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 40-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை. இதனால் குழந்தை இல்லாத தம்பதியினர் தனியார் கருத்தரித்தல் மையங்களை நாடுகின்றனர்.

    எனவே தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதோடு அங்கு சிகிச்சை பெற அதிக அளவு பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் சராசரி குடும்பத்தினர் கடனாளி ஆவதோடு மனச்சுமை மட்டுமின்றி பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர்.

    எனவே தமிழகத்தில் அதிக நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அந்த அரசு மருத்துவமனைகளில் கூட செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி இல்லாதது கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

    எனவே அரசு மருத்துமனைகளில் ஐ.வி.எப்., விந்தணு ஊசி, கரு வங்கி, கருமுட்டை மற்றும் விந்தணு வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்படுகிறது. அதுபோல் கடந்த ஆண்டு தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் ஆகும் பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் மகப்பேறு கால உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே அரசு மருத்துவ மனைகளில் தான் அதிகப்படியான பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் ஊக்கத்தொகையும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படுவதால் பலரும் மேலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

    ஆனால் அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்க தேவையான ஆய்வுக்கூட வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையே நீடிக்கிறது. அதில் ஆய்வக வசதிகளை செய்தால் குழந்தைக்காக ஏங்கும் ஏழை, எளிய தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் பயன் அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    • சில மூட்டுவலி மருந்துகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றவை.
    • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிக முக்கியம்.

    கர்ப்பம் தரிப்பது மகிழ்ச்சியான, உற்சாகமான ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மன அழுத்தமாகவும் மாறிவிடக்கூடும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூட்டுவலி (Rheumatoid Arthritis) இருப்பது கண்டறியப்பட்டால் இப்படி ஏற்படலாம். இது ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நோய். இது மூட்டுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வலி, வீக்கம், விறைப்புத்தன்மை போன்றவை ஏற்படலாம்.

    மூட்டுவலி என்பது மூட்டு திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. மூட்டு வலி உள்ள கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் இந்த ஆன்டிபாடிகள் அசாதாரண அளவுகளில் காணப்படுகின்றன. இந்தப் பெண்களின் கருவிலும் இந்த ஆன்டிபாடிகள் குறைந்த அளவில் உள்ளன. இந்த நிலை, ருமாடிக் பரேசிஸ் (rheumatic paresis) அல்லது பிறவி மூட்டுவலி சார்ந்த கோளாறு என்றும் அறியப்படுகிறது. இது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளை பாதிக்கிறது.

    மூட்டுவலி உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, நோயெதிர்ப்பு சார்ந்த கோளாறின் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் வளராமல் தடுக்கப்படும். குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளைப் போன்ற சில அறிகுறிகள் காணப்படுவதால் டைப் 1 நீரிழிவு நோய் (பருவமடையும் காலத்தில் தோன்றும் வகை 1 நீரிழிவு நோய்) அல்லது லுகேமியா போன்ற நோய்கள் ஏற்படலாம்.

    கர்ப்பத்தின் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு முன்பே தாய்க்கு மூட்டுவலிக்கான அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், அது கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதாவது, கர்ப்பம் தரிக்கும் முன் ஒரு பெண்ணிடம் மூட்டுவலி கண்டறியப்பட்டாலும், மகப்பேறு விடுப்பு எடுக்கத் தொடங்கும்போதுதான், அவர் தீவிரமாக பாதிக்கப்படத் தொடங்குவார். அந்த நேரத்தில், அவர் குழந்தையை முழுநேரமாக கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், வீட்டிற்கு வெளியே எந்த வேலையையும் அவரால் செய்ய முடியாது.

    இந்த நிலை நிச்சயமாக கர்ப்பத்தை மிகவும் சவாலானதாக மாற்றும் என்றாலும், முறையான மேலாண்மையும் கவனிப்பும் இருந்தால், மூட்டுவலி உள்ள பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தையும் ஆரோக்கியமான குழந்தையையும் பெற முடியும் என்பதை அறிவது அவசியம்.

    கர்ப்ப காலத்தில் மூட்டுவலியின் தாக்கத்தை குறைக்க, எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவருடன் தொடர் ஆலோசனை பெறுவது அவசியம். மூட்டுவலிக்கான அறிகுறிகளை நிர்வகிக்கவும், வளரும் கரு மீது மூட்டுவலிக்கான மருந்துகள் ஏற்படுத்த சாத்தியமுள்ள பக்கவிளைவுகளை கண்காணிக்கவும் எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர் உதவுவார். இதற்கிடையில், மகப்பேறு மருத்துவர் கர்ப்பத்தை கண்காணித்து, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்வார்.

    சில மூட்டுவலி மருந்துகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றவை. அது வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பான, பயனுள்ள சிகிச்சைத் திட்டத்தைக் கண்டறிய, எலும்பு மூட்டு மருத்துவ நிபுணரிடம் தொடர் ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.

    கூடுதலாக, கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது கருவின் மீது தாக்கத்தை குறைக்க உதவும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் ஆகியவற்றை பின்பற்றுவது பயன் தரும்.

    *வழக்கமான உடற்பயிற்சி: மூட்டு வலிக்கான அறிகுறிகளைக் குறைக்கவும், உடல் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் இது உதவும். மனநலனுக்கும் உடற்பயிற்சி நன்மை சேர்க்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இது மூட்டுவலி அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். யோகா, நீச்சல் அல்லது நடைப்பயிற்சி போன்ற மென்மையான நடவடிக்கைகள் கர்ப்ப காலத்தில் செய்ய உகந்தவை.

    *சமச்சீர் உணவு: கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிக முக்கியம். ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்பு குறைந்த புரதங்களை உள்ளடக்கிய சீரான உணவை உண்பது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக கொழுப்புள்ள இறைச்சி போன்ற மூட்டுவலி அறிகுறிகளைத் தூண்டக்கூடிய உணவு வகைகளைத் தவிர்ப்பதும் முக்கியம்.

    *மன அழுத்த மேலாண்மை: தியானம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் மைண்ட்புல்னெஸ் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களும் மூட்டுவலி அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். மன அழுத்தம் மூட்டுவலியைத் தூண்டும். எனவே கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்பது முக்கியம்.

    • சானிடரி பேட்களின் பயன்பாட்டினால் சருமத்தில் அரிப்பு, சொறி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
    • பல பெண்கள் காலை முதல் மாலை வரை ஒரே பேடு பயன்படுத்துகின்றனர்.

    பெண்கள் பூப்பூ எய்திய நாளில் இருந்து கடைப்பூப்பூ என்று சொல்லப்படும் மெனோபாஸ் நிலையை அடையும் வரை ஒவ்வொரு மாதமும் பூப்பூ சுழற்சி நடைபெறுகிறது. வெகுசிலரே ஒவ்வொரு மாதமும் இதனை எளிமையாக கடந்து செல்கின்றனர். பல பெண்கள் அடிவயிற்றில் வலி, இடுப்பு வலி, குமட்டல், அதிகப்படியான உதிரப்போக்கு, சோர்வு போன்ற உடல்நல பாதிப்புகளோடு கோபம், எரிச்சல், தூக்கமின்மை போன்ற மனநல மாற்றங்களையும் அடைகின்றனர்.

    பெரும்பாலான பெண்கள் தற்பொழுது மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளையே பயன்படுத்துகின்றனர். இன்றைய சானிடரி பேடுகளில் அவற்றின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, சூப்பர் அப்சார்பென்ட் பாலிமரை பயன்படுத்துகின்றனர். மேலும் கசிவைத் தடுக்க பாலிஎதிலீன், பாலிப்ரொப்பிலீன் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவற்றுடன் டையாக்ஸின்கள், பெட்ரோ கெமிக்கல்கள் போன்ற ரசாயணப் பொருட்கள் சேர்க்கப்படுவதாக தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இத்தகைய வேதிப்பொருள்கள் குறைந்த அளவில் பயன்படுத்தினாலும் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளவை. டெல்லியில் ஒரு என்.ஜி.ஓ. நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஆர்கானிக் பேட்கள் என்று தற்பொழுது வழக்கத்தில் உள்ள பேடுகளிலும் இத்தகைய மூலப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைப்போலவே இலியோனிஸ், யுனிவர்சிட்டி மேற்கொண்ட ஆய்வில் மெதிலீன் குளோரைட், டொலுயீன், சைலீன் போன்ற செயற்கை வேதிப்பொருள்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் வுறுகின்றன.

    இத்தகைய சானிடரி பேடுகளின் பயன்பாட்டினால் சருமத்தில் அரிப்பு, சொறி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறைந்தது 4 மணி நேரமும், அதிகபட்சம் 6 மணி நேரமும் தான் ஒரு சானிடரி பேட் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் பல பெண்கள் காலை முதல் மாலை வரை ஒரே பேட் பயன்படுத்துகின்றனர். மேலும் ரத்தக்கசிவு இல்லையெனில் பயன்படுத்திய அதே நாப்கினை மீண்டும் சிலர் பயன்படுத்துகின்றனர். இவை இரண்டுமே மிகவும் தவறான பழக்கவழக்கங்கள் ஆகும். இதனால் பல்வேறு வகையான கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் நாப்கினில் உள்ள ரசாயணங்கள் பிறப்புறுப்பின் தோலின் வழியாக உடலுக்குள் சென்று முறைதிருந்திய மாதவிடாய், ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இனப்பெருக்க உறுப்பு புற்றுநோய், பெண் உடலில் ஆண் ஹார்மோன்களின் அதிக உற்பத்தி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

    இவை அனைத்தையும் டயாக்சின் என்ற ஒேர ஒரு ரசாயனமே ஏற்படுத்திவிடும். இத்தகைய டயாக்சின் நாம் பயன்படுத்தும் சானிடரி பேட்களில் காணப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவில் டாக்டர்.எட்வர்ட், டயாக்சின் குறித்த தன்னுடைய மருத்துவ கட்டுரையை வெளியிட்டார். அதில் பல்வேறு ஆபத்துகளைப் பற்றி விளக்கியிருந்த அவர், குறிப்பாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், மார்பக புற்று, கருப்பை புற்று, குறுகிய மாதவிடாய், சினைப்பை நீர்கட்டி, கருவுறுதலில் தாமதம் போன்றவை டயாக்சின் பாதிப்பினால் ஏற்படும் என்று விளக்கி உள்ளார். நாப்கின்கள் பழக்கத்திற்கு வராத காலகட்டத்தில் நம் வீடுகளில் பெண்கள் பருத்தியினாலான துணிகளைப் பயன்படுத்தினர்.

    சிலர் அதனை துவைத்து மீண்டும் பயன்படுத்தினர். சிலர் பயன்படுத்தியவைகளை புதைக்கவோ, எரிக்கவோ செய்து ஒவ்வொரு முறையும் புதியவற்றை பயன்படுத்தினர். இது ஒவ்வொரு நபரின் பொருளாதார நிலையை சார்ந்து இருந்தது. ஆனால் அக்காலப் பெண்களிடம் மாதவிடாய் கோளாறுகளும், சினைப்பை நீர்கட்டி, மகப்பேற்றில் காலதாமதம், கருப்பை மற்றும் மார்பகம் புற்று வெற்றின் தாக்கம் தற்போது இருக்கும் பெண்களிடம் காணப்படும் அளவிற்கு பரவி இருந்ததா என்பது ஆராய்ச்சிக்குரியதே. ஏனெனில் அவர்கள் இத்தகைய நோய்களின் பாதிப்புகளில் பெரும்பாலும் தாக்கப்படவில்லை என்பதற்கு அவர்களது சந்ததிகளான நம்முடைய பெற்றோரும், நாமும் அறிந்ததே.

    ஆனால் இன்று ஏன் பெரும்பாலான குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் இத்தகைய பாதிப்புகளை அடைகின்றனர் என ஆராய்வோமானால், நமது உணவு மற்றும் வாழ்வியல் மாற்றம் ஒரு காரணமாக இருப்பினும், இன்று நாம் பயன்படுத்தும் நாப்கின்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது. நாம் ஏற்படுத்தும் மாற்றம் மட்டுமே நம்முடைய எதிர்கால சந்ததியைப் பாதுகாக்கும். எனவே இயற்கையாக தயாரிக்கப்பட்ட துணி நாப்கின்களை வாங்குவது அல்லது வீட்லேயே நம் தேவைக்கு ஏற்ப தயாரிப்பது என்ற ஏதேனும் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும்.

    துணி நாப்கின்களை பயன்படுத்திய பிறகு நன்றாக தண்ணீரில் ஊறவைத்து, கிருமி நாசினியைக் கொண்டு துவைத்து, வெயிலில் உலரவைத்து பயன்படுத்தினால் எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. தற்பொழுது பலர் மூலிகை நாப்கின்களை வீடுகளிலேயே தயாரிக்கின்றனர். அதில் பருத்தியுடன் திரிபலா சூரணம், கற்றாழை, வேப்பிலை போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். தேவையான அளவிற்கு காட்டன் துணியை கத்தரித்து அதன்மேல் பஞ்சினை வைத்து, பின்னர் சிறிது மூலிகைப் பொடிகளை தூவி, மீண்டும் பஞ்சினை வைத்து காட்டன் துணியினால் மூடி தையல் மிஷினின் உதவியுடன் நான்கு பக்கங்களிலும் தைத்து நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

    நாம் நம் உடல்நலத்திற்கென சிறிது நேரம் ஒதுக்கி எளிமையான முறையில் வீட்லேயே தயார் செய்தோ அல்லது வெளியில் விற்கப்படும் துணி நாப்கின்களையோ பயன்படுத்தலாம். எத்தகைய நாப்கினாக இருப்பினும் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி பயன்படுத்துவதே சிறந்தது. இவ்வாறு பயன்படுத்தும்போது அவை சரும பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. எந்தவித ரசாயணமும் அற்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அவற்றால் கருப்பை புற்று நோய், மாதவிடாய் கோளாறுகள், ஹார்மோன்களின் சீரற்ற தன்மை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் குறைவு.

    மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சானிடரி பேட்களின் பயன்பாட்டினைப் பற்றிய விழிப்புணர்வை பள்ளிக் குழந்ந்தைகளிடம் இருந்தே தொடங்குவது சிறந்தது. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களைக் குறித்து ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் இத்தகைய இயற்கையான சானிடரி பேட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

    ஏனெனில் ரசாயணப் பொருள் மற்றும் ப்ளாஸ்டிக் நிறைந்த நாப்கினை பயன்படுத்தும்போது எந்த அளவிற்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றதோ, அதைப்போலவே பயன்படுத்திய நாப்கின்கள் புதைக்கப்பட்டால் அவை மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம், நேரத்தில் அவை எரிக்கப்பட்டால் வளிமண்டலக் காற்றுடன் கலந்து சுவாசப்பாதை நோய்களை ஏற்படுத்தும். எனவே எளிதில் மக்கக்கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நாமும் நல்ல உடல்நலனோடு வாழ்ந்து், எதிர்கால சந்ததியரையும் வளமோடு வாழச் செய்வோம்.

    ×