search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் ஆசிய கோப்பை"

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 122 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 121 ரன் எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

    சில்ஹெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மாதவி அதிகபட்சமாக 35 ரன்னும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் பிஸ்மா மரூப் மட்டும் தாக்குப் பிடித்து 42 ரன்கள் எடுத்தார்.

    கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன

    • பேட்டிங்கில் அரை சதம் விளாசிய ஷபாலி வர்மா பந்து வீச்சிலும் அசத்தினார்.
    • வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 100 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - வங்களா தேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 55 ரன்கள் அடித்தார்.

    160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது. 45 ரன்கள் வரை விக்கெட்டை இழக்காத அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். பேட்டிங்கில் அரை சதம் விளாசிய ஷபாலி வர்மா பந்து வீச்சிலும் அசத்தினார். 4 ஓவர்கள் பந்து வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ×