search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒரு ரன்னில் திரில் வெற்றி - பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை
    X

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இலங்கை அணி

    ஒரு ரன்னில் திரில் வெற்றி - பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 122 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 121 ரன் எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

    சில்ஹெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மாதவி அதிகபட்சமாக 35 ரன்னும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் பிஸ்மா மரூப் மட்டும் தாக்குப் பிடித்து 42 ரன்கள் எடுத்தார்.

    கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன

    Next Story
    ×