search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு பெண்மணி"

    அமெரிக்காவில் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார். #ManekaGandhi #TripleTalaq
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கிடையே, பெங்களூரை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தனது கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில், அமெரிக்காவில் வசிக்கும் எனது கணவர் வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளார். எனவே வெளியுறவுத்துறை  அமைச்சகம் இதில் தலையிட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலையிட வேண்டும் என கோரியுள்ளார்.



    இந்நிலையில், மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி, கணவனால் பாதிக்கப்பட்ட பெங்களூர் பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ள முதல் புகார் இதுவாகும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். #ManekaGandhi #TripleTalaq
    ×